சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி... நடிகை திவ்யா ஸ்ரீதரை நெகிழ வைத்த செவ்வந்தி சீரியல் டீம் - வைரலாகும் வீடியோ

Published : Nov 30, 2022, 10:17 AM IST
சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி... நடிகை திவ்யா ஸ்ரீதரை நெகிழ வைத்த செவ்வந்தி சீரியல் டீம் - வைரலாகும் வீடியோ

சுருக்கம்

கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு, அவருடன் செவ்வந்தி சீரியலில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி உள்ளனர்.

கேளடி கண்மணி என்கிற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவருக்கும் அந்த சீரியலில் நடித்த நடிகர் அர்னவ்விற்கு இடையே காதல் ஏற்பட்டு, இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்த இந்த ஜோடி கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததோடு, தான் கர்ப்பமாக இருக்கும் தகவலையும் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

இதையடுத்து சில வாரத்திலேயே இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அர்னவ் தன்னை அடித்து டார்ச்சர் செய்ததாகவும், அவர் மிதித்ததில் தனது கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் இருந்து அழுதபடி வீடியோ வெளியிட்டு, அர்னவ் மீது அடுக்கடுக்கான புகார்களையும் முன்வைத்து இருந்தார் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

இதையும் படியுங்கள்... விஜய் முதல் நெப்போலியன் வரை... நடிப்பை தாண்டி தொழில்கள் மூலம் கோடி கோடியாய் கல்லாகட்டும் சினிமா நட்சத்திரங்கள்

இதையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் நடிகர் அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சில நாட்கள் சிறைவாசத்துக்கு பின் ஜாமினில் வெளியே வந்தார் அர்னவ்.

இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு, அவருடன் செவ்வந்தி சீரியலில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் சர்ப்ரைஸாக வளைகாப்பு நடத்தி உள்ளனர். இதுகுறித்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை திவ்யா ஸ்ரீதர், ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்வதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  பட புரமோஷனுக்கு வரமாட்டேன்னு அடம்பிடிப்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு நடிகையா! தெருதெருவாக போஸ்டர் ஒட்டி அசத்தல்

PREV
click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்