Raja Rani 2 serial : அப்துலை வெல்ல சபதம் எடுக்கும் சந்தியா...சூழ்ச்சி செய்யும் அர்ச்சனா ..இன்றைய எபிசோட்

By Kanmani P  |  First Published Nov 7, 2022, 6:58 PM IST

நாளைக்கு சைக்கிள் ரேஸ் நடப்பது பற்றி சொல்ல இது ரொம்ப கஷ்டமான விஷயம் பார்த்து பண்ணுங்க என சரவணன் கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


ராஜா ராணி தொடரில் இன்று சைக்கிள் பயிற்சி கொடுக்க புதியதாக ஒருவர் வந்திருக்கிறார்.  அப்பொழுது அப்துல் சந்தியாவிடம் சென்று உங்களுக்கு நீங்கள் ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். நான் வேணா கோச்சிக்கிட்ட பேசுகிறேன் எனக் கூற, அதற்கு சந்தியா நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறிவிட்டு பயிற்சியில் கலந்து கொள்கிறார். 

பின்னர் சைக்கிள் ரேஸ் நடத்தப்படுகிறது. அப்துல் பிரமாதமாக ஃபர்ப்பாம் செய்ய வழக்கம் போல சந்தியா பாதிலேயே நிற்கிறார். இதை வைத்து அப்துல் கமெண்ட் அடிக்க சந்தியா இது சரியா செஞ்சா இவன் மூக்கை உடைக்காம விட்டுட்டோமே என வருத்தப்படுகிறார். அதையடுத்து சைக்கிள் போட்டி நடக்க அதில் சந்தியா நன்றாகவே ஃபர்ப்பாம் செய்கிறார். பிறகு நாளைக்கு இதை வைத்து ஒரு போட்டி இருக்கிறது. அது வித்தியாசமாக இருக்கும் என விதிமுறைகளை கூறுகிறார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...baakiyalakshmi : ரேஷன் கார்டால் வந்த வினை..அதிரடி காட்டிய கோபி..எழிலை மிரட்டும் ஈஸ்வரி

மேலும் செய்திகளுக்கு...karthi sardar movie : வசூலில் சாதனை படைத்த கார்த்தியின் சர்தார்...எவ்வளவு தெரியுமா?

மறுபுறம் தேர்தலில் நிற்க வைப்பது பற்றி செந்திலிடம் ரகசியமாக பேசுகிறார் அர்ச்சனா. இந்த விஷயத்தை வீட்டில் சொல்லிவிடலாம் என செந்தில் சொல்ல வேண்டாம் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என அர்ச்சனா கூறிவிடுகிறார். அடுத்து சந்தியா ஜோதி மற்றும் சேத்தனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது சரவணன் போன் செய்கிறார். ஜோதி ஃபோனை வாங்கி பேசுகிறார். அடுத்து சந்தியா சரவணன் இடம் பேசும்போது, சரவணன் விடுகதைக்கு பதில் கிடைத்துவிட்டது என கூறுகிறார். நாளைக்கு சைக்கிள் ரேஸ் நடப்பது பற்றி சொல்ல இது ரொம்ப கஷ்டமான விஷயம் பார்த்து பண்ணுங்க என சரவணன் கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

click me!