நான் வீட்டை விட்டு வெளியே சென்றதும் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறீங்க, தினமும் பிரியாணி தான் ஊருக்கே வாசனை வருது எனக் கூறுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ரேஷன் கார்டை வாங்கிக் கொண்டு வந்தே தீருவேன் என்கிற பிடிவாதத்தில் வரும் கோபி, இங்கு அவமானம் தான் மிஞ்சுகிறது. அவருடைய தந்தை உட்பட அனைவரும் இவரை அவமானப்படுத்த பாக்யாவிடம் ஏய்.. போய் ரேஷன் கார்டை எடுத்து வா என திமிராக மிரட்டுகிறார். இதற்கு.. நான் உங்க பொண்டாட்டி கிடையாது மரியாதை முக்கியம் என பேசி திருப்பி அனுப்பி விடுகிறார். அதையடுத்து வீட்டிற்கு செல்லும் கோபி என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியலை என சத்தம் போட, ராதிகாவுக்கு சூல்லென கோபம் வருகிறது. உங்களால் எதுவுமே பண்ண முடியாது! அந்த வீட்டில் இருந்து தானே வெளியே வந்தீங்க எல்லோரும் சேர்ந்து தானே உங்களுக்கள வெளியில் அனுப்பினாங்க. ஒரு ரேஷன் கார்டு கூட வாங்கிட்டு வர முடியாதா என்ன கத்துக்கிறார்.
இதைத்தொடர்ந்து என்ன நீ கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட என கோபி கேட்க, உங்களுக்காக நமக்காக தான் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணினேன். ஆனால் உங்களால் ஒரு ரேஷன் கார்டு கூட வாங்கிட்டு வர முடியல! என கடுமையான சாடுகிறார். உனக்கென்ன ரேஷன் கார்டு தானே வேண்டும் நான் போய் எடுத்துக்கிட்டு வரேன் என வீரமாக செல்லும் கோபி, மீண்டும் பாக்யா வீட்டிற்கு சென்று நேரடியாக கிச்சனுக்கு செல்கிறார். அனைவரும் வெளியே போக சொல்லி சத்தம் போடுகிறார்கள். ஆனால் எதையும் காதில் போட்டுக் கொள்ளாத கோபி தொடர்ந்து ரேஷன் கார்டை தேடுகிறார்.
மேலும் செய்திகளுக்கு...karthi sardar movie : வசூலில் சாதனை படைத்த கார்த்தியின் சர்தார்...எவ்வளவு தெரியுமா?
அப்போது செழியன் ஜெனியிடம் அந்த ரேஷன் கார்டு எங்க இருக்கு என கேட்க, கபோர்டில் இருப்பதாக சொல்கிறார். பின்னர் அதை தேடி எடுக்கிறார் கோபி, அதோடு நான் வீட்டை விட்டு வெளியே சென்றதும் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறீங்க, தினமும் பிரியாணி தான் ஊருக்கே வாசனை வருது எனக் கூறுகிறார். ரொம்ப சந்தோஷமா இருங்க என சொல்லிவிட்டு ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கிவிட்டு ரிட்டன் பண்ணுகிறேன் என கிளம்புகிறார்.
மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 promo : பலகாரக்கடை வைக்கும் சமந்தா..புதிய டாஸ்க் என்ன தெரியுமா? ப்ரோமோ இதோ
ரேஷன் கார்டை எடுத்துக்கொண்டு போய் ராதிகாவிடம் நீட்டி இந்தா இப்போ உனக்கு சந்தோசமா எனக் கேட்க.. கூலாகும் ராதிகா அப்படியே பிளேட்டை மாற்றி, நீங்கள் டென்ஷனாகாதீர்கள். இப்பொழுது என்ன நடந்துடுச்சு எனக்கூறி, பிளாக் காபி போட்டு வருவதாக சென்று விடுகிறார். அடுத்து எழில் வீட்டுக்குள் வர அப்போது ஈஸ்வரி.. வர்ஷினி வந்த விஷயம் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். அந்த பொண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கு. பண திமிரு இல்லாமல் இருக்கா. நம்ம எழிலுக்கு கல்யாணம் பண்ணி வச்சா எப்படி இருக்கும் என பேசிக்கொண்டு இருக்க, இதை கேட்கும் எழில் அதிர்ச்சியாகிறார். ஆனால் பாக்யா இப்ப எதுக்கு கல்யாணம் ரெண்டு மூணு வருஷம் போகட்டும் என சொல்கிறார். ஈஸ்வரி.. எழிலுக்கு நல்லா பெருசா கல்யாணம் பண்ணனும். லவ் பண்ணிட்டு வந்தால் அவ்வளவு தான் என மிரட்டிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்யலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.