bharathi kannamma : திட்டமிட்டபடி கருவை களைத்த வெண்பா.. அதிரடி முடிவெடுத்த ஹேமா..

By Kanmani P  |  First Published Nov 7, 2022, 6:12 PM IST

லட்சுமியை பள்ளியில் சந்திக்கும் ஹேமா தனக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என்றும், சமையலம்மாவை ஈவினிங் வீட்டிற்கு அழைத்து வா நான் முக்கிய முடிவெடுக்க இருக்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


விஜய் டிவியில்  பாரதிகண்ணம்மா தொடர் பல ஆண்டுகளாக ஒரே கதைக்களத்தை கையில் எடுப்பதால் சற்று ரசிகர்களுக்கு போரடித்திருந்தது. இதனை சரி செய்யும் வகையில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். அதன்படி வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில்  குடும்பத்தால் நிறுத்தப்பட்டு, பின்னர் ரோஹித் தான் வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை எனத் தெரிய, இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இருந்த வெண்பா புதிய திட்டம் ஒன்றை தீட்டி தானாகவே படிக்கட்டில் இருந்த உருண்டு விட்டார் கடைசி எபிசோடில்.

 இன்று மருத்துவர்கள் வெண்பாவின் கரு கலைந்து விட்டதாக கூற ஷர்மிளாவும், ரோஹித்தும் கதறி அழுகின்றனர். மறுபக்கம் பாரதி சோபாவில் வந்து அமர அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த சௌந்தர்யா மற்றும் வேனு இருவரும் பாரதியை கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்கின்றனர். பாரதி மகளின்  ஷூ-வை துடைத்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ஹேமா ஸ்கூலுக்கு கிளம்புவதாக கூற, பாரதி ஷூ மாட்டி விடுவதாக அழைக்கிறார். உடனே ஷுவை வெடுக்கென பிடுங்குகிறார் ஹேமா.

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...karthi sardar movie : வசூலில் சாதனை படைத்த கார்த்தியின் சர்தார்...எவ்வளவு தெரியுமா?

தான் செய்தது தவறுதான் என்னை மன்னித்துவிடு என்றும் கேட்கிறார் பாரதி. ஆனால் ஹேமாவோ  இனிமேல் உங்களை டாடி என கூப்பிட மாட்டேன் என கூறிவிட்டு தனது சித்தப்பா அகிலனை ஸ்கூலுக்கு கொண்டு போய் விடும்படி கூறி கிளம்பி விடுகிறார். மீண்டும் மருத்துவமனை காட்டப்படுகிறது. மூச்சு திணறுவது போல நடித்து பாரதியை தன் ரூமுக்கு வர வைக்கும் வெண்பாவிடம், பாரதி..உன்னுடைய நடிப்பை நான் இனிமேல் நம்ப மாட்டேன் எனக் கூற, என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை தயவு செய்து என்னை அவாய்ட் செய்யாதே என்று கெஞ்சுவது போல நடிக்கிறார். ஆனால் பாரதி எதையும் நம்பாமல் உனது சாப்டர் முடிந்து விட்டது என திட்டிவிட்டு கிளம்புகிறார்.

மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 promo : பலகாரக்கடை வைக்கும் சமந்தா..புதிய டாஸ்க் என்ன தெரியுமா? ப்ரோமோ இதோ

இதற்கிடையே லட்சுமியை பள்ளியில் சந்திக்கும் ஹேமா தனக்கு அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை என்றும், சமையலம்மாவை ஈவினிங் வீட்டிற்கு அழைத்து வா நான் முக்கிய முடிவெடுக்க இருக்கிறேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

click me!