bharathi kannamma : பாரதிக்காக சுமந்த கரு..இனி எனக்கு தேவையில்லை...விபரீத முடிவெடுத்த வெண்பா

Published : Nov 05, 2022, 01:08 PM ISTUpdated : Nov 05, 2022, 01:09 PM IST
 bharathi kannamma : பாரதிக்காக சுமந்த கரு..இனி எனக்கு தேவையில்லை...விபரீத முடிவெடுத்த வெண்பா

சுருக்கம்

பாரதி செய்தது குறித்து கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக பாரதியை திருமணம் செய்து கொள்ள ரெடியான வெண்பாவிற்கு மொத்த குடும்பமும் ஷாக் கொடுக்க, வெண்பா வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரோஹித் தான் தந்தை என தெரிந்ததும் அவரை திருமணம் செய்து வைத்துவிட்டனர். நேற்றைய எபிசோடில் மேளதாளம் முழங்க என்ட்ரி கொடுத்திருந்தார் ரோஹித்.

மறுபுறம் பாரதியை மொத்த குடும்பமும் ஒதுக்க, ஹேமாவிடம் லட்சுமி உண்மையை சொல்ல ரெடியானார். ஆனால் அதனை சௌந்தர்யா தடுத்து நிறுத்தி இருந்தார். நேற்றைய எபிசோட் முடிவடைந்திருந்தது. இன்று சௌந்தர்யா உட்பட அனைவரும் சோகத்தில் அமர்ந்திருக்கின்றனர். இந்த பக்கம் கண்ணம்மா மற்றும் லட்சுமி தூங்காமல் தவிக்க லட்சுமி தனக்கு அப்பா இவர்தான் என்று தெரிந்து இருக்காமலே இருந்திருக்கலாம் என கூற அவர் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார் கண்ணம்மா.

மேலும் செய்திகளுக்கு...M N Nambiar : பழம்பெரும் நடிகர் நம்பியாரின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ

சோகமாக அமர்ந்திருக்கும் அனைவரும் முன்னிலையும் பாரதி வந்து நிற்க அனைவரும் கலைந்து செல்கின்றனர். இதனால் பாரதி கண்கலங்கி அழுகிறார். பின்னர் வெண்பா ரூமுக்கு வரும் ஷர்மிளா, உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது ரோஹித் கட்டின தாலி உன் கழுத்துல இருக்கு என கூறி பால் சோம்பை கையில் கொடுத்து ரோஹித் ரூமுக்கு செல்ல சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். இதையடுத்து வெண்பா புறப்படுகிறார்.

அப்போது பாரதிக்காக தான் இந்த கர்ப்பத்தை சுமந்தேன் இனிமேல் எதற்கு என படிக்கட்டில் இருந்து விழுகிறார். பிறகு வெண்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். பாரதியும் நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். அதுக்காக என்னை எல்லோரும் குற்றவாளி போல் நிற்க வைக்கிறார்கள். அந்த கண்ணம்மாவையும் இதே போல் தலைகுனிந்து நிற்க வைப்பேன். டி என் ஏ ரிப்போர்ட் மட்டும் வரட்டும் அவளுக்கு இருக்கு என நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் பாரதி செய்தது குறித்து கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sandy Latest Update: டான்ஸ்னா சும்மாவா? மாஸ்டர் சாண்டியுடன் களமிறங்கும் புதிய ஜோடிகள் - லேட்டஸ்ட் அப்டேட்!
Sun Tv: தொடரும் சீரியல் நேர மாற்றங்கள்! சன் டிவியின் அதிரடி அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!