raja rani 2 : சந்தியா போட்ட முடிச்சை அவிழ்ப்பாரா சரவணன்.. இன்றைய எபிசோட்

Published : Nov 04, 2022, 02:19 PM ISTUpdated : Nov 04, 2022, 02:21 PM IST
raja rani 2 : சந்தியா போட்ட முடிச்சை அவிழ்ப்பாரா சரவணன்..  இன்றைய எபிசோட்

சுருக்கம்

சரவணன் விடுகதைக்கு பதில் கூறுவதற்காக மயிலு மற்றும் ஜெசி இடம் கேட்டு அவர்களும் தெரியாது என கூறவே பிறகு கடையில் இருக்கும் சர்க்கரையிடம் கேட்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடர் இளைய சமூகத்திற்கு நல்ல முன் உதாரணத்தை எடுத்து வரும் நாயகன் நாயகியாக கொண்டுள்ளது. இந்த சீரியல் சமீப காலமாக ட்ரெண்டாகியும் வருகிறது. தற்போது சந்தியா போலீசாகும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. இதற்காக ட்ரைனிங் சென்றுள்ள அவர் திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி அதிர்ச்சி செய்தார்.

பின்னர் சரவணனின் உந்துதலின்படி தற்போது கடினமான உழைப்பை கொடுத்து தான் வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கில் முயன்று வருகிறார் சந்தியா. இன்றைய எபிசோடில் ஜெஸ்ஸியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆதி புலம்பிக்கொண்டே இருக்கிறார். இனி எவ்வளவு செலவாகும் தெரியுமா இதற்கு தான் கல்யாணமே வேண்டாம் என கூறினேன் என புலம்ப கடுப்பாகும் ஜெசி.

bigg boss 6 promo : கலீல் விழுந்தும் கேட்காததால் கடுப்பான ஜனனி..குயின்சியை விளாசும் ப்ரோமோ இதோ

நீ எல்லாம் ஒரு மனுசனா என திட்டுகிறார். இந்த பக்கம் மாலை நேரத்தில் சந்தியா, சரவணன் இருவருமே மாற்றி மாற்றி போன் செய்ய இருவருக்கும் ரீச் ஆகவில்லை. சிறிது நேரம் கழித்து சரவணனுக்கு ஃபோன் பண்ணி இவ்வளவு நேரம் யார்கிட்ட பேசிட்டு இருந்தீங்க என கேட்கிறார் சந்தியா. இதை தொடர்ந்து சரவணன் போன் பண்ணினால் போன் எடுங்க இல்லேன்னா வேலையே ஓட மாட்டேங்குது எனக் கூற சும்மா இருந்தால் அப்படித்தான் உங்களுக்கு ஒரு வேலை தருகிறேன் என கூறுகிறார் சந்தியா.

அதாவது மூணு பொண்ணுங்க ஒரே முகம் ஒரு பொண்ணு ஆத்துல, இன்னொரு பொண்ணு காட்டுல, இன்னொரு பொண்ணு வீட்டுல அது என்ன என கேட்க நாளைக்கு போன் செய்யும்போது பதில் கூற வேண்டும் எனக் கூறி வைத்து விடுகிறார். அதோடு முன்னதாக சந்தியா தனது பயிற்சியின் போது நடந்த எல்லாவற்றையும் கூறுகிறார் அப்போது சரவணன் அந்த பொண்ண தூக்கிட்டு ஓடாமல் நீங்க இருந்திருந்தால் நிச்சயம் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில்  வந்திருக்கலாம் என சொல்ல இதை முயற்சித்து பார்ப்பதற்காக இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுக்குள் ஜோதியின் உதவியுடன் ஓட அப்துல் எடுத்த அதே அளவு நேரத்தில் வந்திருப்பதை கண்டு ஆச்சரியப்படுகிறார் சந்தியா. இது குறித்து சரவணன் இடமும் தெரிவிக்கிறார்.

பின்னர் சரவணன் விடுகதைக்கு பதில் கூறுவதற்காக மயிலு மற்றும் ஜெசி இடம் கேட்டு அவர்களும் தெரியாது என கூறவே பிறகு கடையில் இருக்கும் சர்க்கரையிடம் கேட்கிறார். கொஞ்ச நேரத்தில் யோசித்து ஒரு பதிலை கூறுகிறான் சர்க்கரை.  இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!