baakiyalakshmi : இனியாவை நினைத்து உருகும் கோபி...செம கடுப்பில் இருக்கும் ராதிகா..இன்றைய எபிசோட்...

Published : Nov 04, 2022, 11:43 AM ISTUpdated : Nov 04, 2022, 12:34 PM IST
baakiyalakshmi  : இனியாவை நினைத்து உருகும் கோபி...செம கடுப்பில் இருக்கும் ராதிகா..இன்றைய எபிசோட்...

சுருக்கம்

உங்க மேல தான் பயங்கர கோபத்தில் இருக்கிறேன். ஸ்கூலுக்கு வந்த  வேலைய பார்க்க வேண்டியதுதானே, நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல எனக் சாடுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் வீட்டில் இருக்கும் பெண்களுக்கான கதைக்களத்தை முன்னெடுத்து செல்கிறது. படிக்காத பெண் என்பதால் கணவர் புறக்கணிப்பதும், அவர் முன்னதாக காதலித்த பெண்ணை கரம் பிடிப்பதும்,  மாமியார் கொடுமை செய்வதும் என ஒரு சராசரி பெண்மணியின் கதையை கண்முன் நிறுத்தி வருகிறது பாக்கியலட்சுமி. தற்போது கோபி, ராதிகாவை திருமணம் செய்துகொண்டு மயூவிற்கு டாடி ஆகிவிட்டார்.

 பள்ளியில் பேரன்ட்ஸ் மீட்டிங் நடைபெறுகிறது. பெற்றோர்களை ஆசிரியர் சந்திக்க வேண்டிய நாளும் வருகிறது. அப்போது அதே பள்ளியில் படிக்கும் மயூவிற்காக கோபியும் ராதிகாவும் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால் இனியாவிற்காக பாக்கியா மட்டும் பள்ளிக்கு வருகிறார். இனியாவை இருசக்கர வாகனத்தில் அமர வைக்கும் போது தடுமாறும் காட்சிகளை கூட கோபி பார்க்கிறார். பின்னர் அதே பள்ளிக்கு வர அவரை பார்த்த இனியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.

இன்று இனியாவின் நண்பர்களின் அம்மாக்கள் அனைவரும் என்ன இனியாவின் அப்பா அவர்களுடன் வருகிறார் என கேட்கின்றனர்.  இது எதையும் கண்டு கொள்ளாமல் கோபியும் சென்றுவிடுகிறேன். ஆசிரியை கண்டு அவரிடம் நான் தான் மகியூவின் அப்பா என அறிமுகப்படுத்திக் கொண்டு கையெழுத்துடுகிறார். பின்னர் இனியாவுக்கு கையெழுத்து இடுவதற்காக நான் செல்ல உள்ளதாக ராதிகாவிடம் கூறுகிறார். எப்போதும் நான் தான் இனியாவிற்கு கையெழுத்து போடுவேன் நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டுப் போகிறார். 

ஆனால் என் அம்மா போட்டுவிட்டார்.  வெளியில் வந்ததும் நீங்கள் எனக்கு யாரு என கேட்க டாடி என சொல்ல அப்போ இனியாவுக்கு என கேட்கிறார். நான் அவளுக்கு முதல்ல டாடி உனக்கு இரண்டாவது டாடி என்று சொல்லி காருக்குள் அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ராதிகாவை திருப்பி பார்க்கும் கோபிக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. பயங்கர கோபத்துடன் இருக்கிறார் ராதிகா.

என்ன ஆச்சு என கேட்க உங்க மேல தான் பயங்கர கோபத்தில் இருக்கிறேன். ஸ்கூலுக்கு வந்த  வேலைய பார்க்க வேண்டியதுதானே, நீங்க பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல எனக் சாடுகிறார். அடுத்து பாக்கியா ஹோட்டலுக்கு சென்று பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து வாங்கி கொடுக்கிறார். வருத்தப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்து எனக் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Siragadikka Aasai : மீனா எடுத்த முட்டாள்தனமான முடிவு... சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்
Ethirneechal Thodargiradhu : தர்ஷினியை கடத்தியது இவரா? ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் ஜனனி