25 வருஷமா அவகிட்ட கஷ்டப்பட்டேன்..இனி இவகிட்ட கஷ்டப்படணுமா? புலம்பும் கோபி

Published : Nov 01, 2022, 02:48 PM IST
25 வருஷமா அவகிட்ட கஷ்டப்பட்டேன்..இனி  இவகிட்ட கஷ்டப்படணுமா?  புலம்பும் கோபி

சுருக்கம்

அடுத்த நொடி ராதிகா கொந்தளிக்கிறார். எதற்காக பாக்யாவிற்கு ஃபோன் செய்து இவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை நீங்கள் உங்கள் அப்பா அம்மாவிடம் தானே கேட்க வேண்டும் என கோபித்துக் கொள்கிறார்.

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பாக்யா பழிவாங்கும் படலம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கோபிக்கு கொடுக்க வேண்டிய 40 லட்சத்தில் 40 ஆயிரத்தை இன்ஸ்டால்மெண்டாக கொடுத்து கோபியின் மூக்கை உடைத்து இருந்தார் பாக்கியலட்சுமி. இதனால் அப்செட் ஆக இருந்தார் கோபி.

இதையடுத்து இவருக்கு வந்த கடிதத்தை பாக்யாவின் வீட்டில் உள்ளோர் கோபி என்று யாரும் இங்கு கிடையாது என திருப்பி அனுப்பி விட்டனர். திரும்பி செல்லும் போஸ்ட்மேனை கண்டறியும் கோபி அவரிடம் தனக்கு லெட்டர் வந்திருக்கிறதா என கேட்க நடந்தவற்றை கூறி, என்ன நடந்தது? ஏன் அங்கிருந்து வந்து விட்டீர்கள் என விசாரிக்கிறார் போஸ்ட்மேன். இதனால் கடுப்பாகும் கோபி லெட்டரை மட்டும் கொடுங்கள் என வாங்கிக்கொண்டு சென்று விடுகிறார்.

மேலும் செய்திகளுக்கு...bharathi kannamma : தாலி கட்ட முடிவு செய்த பாரதி..பளார் விட்ட கண்ணம்மா.. இன்றைய முழு எபிசோடு

பின்னர் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை ராதிகாவிடம் தெரிவிக்கிறார்.  எனக்கு தெரியும் வேறு என்ன எதிர்பார்த்தீர்கள் என கேட்கும் ராதிகா, உடனடியாக நமக்கு அட்ரஸ் ப்ரூப் வாங்க வேண்டும் நீங்கள் சென்று உங்கள் ரேஷன் கார்டில் இருந்து பெயரை நீக்கி நமக்கென ஒரு ரேஷன் கார்டு போடுங்கள் என கூறுகிறார். இதை தொடர்ந்து பாக்யாவிற்கு ஃபோன் செய்யும் கோபி எனக்கு வந்த லெட்டரை திருப்பி அனுப்பி விட்டீர்களா? உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு என திட்டுகிறார்.

உங்கள் லெட்டரை வாங்கி வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்வோம் என கிண்டலாக பேசுகிறார் பாக்யா. இதை அடுத்து என் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும் என கூறுகிறார். எனக்கு நீக்க தெரியாது என்கிறார். அதோடு ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயரை பேனாவை வைத்து அழித்து விடவா என பாக்கியா நக்கலா பேச, டென்ஷனான கோபி, ரேஷன் கார்டை எடுத்துக் கொடு என கூறுகிறார். அதெல்லாம் என்கிட்ட கிடையாது மாமாவிடம் தான் இருக்கிறது என சொல்லி போனை கட் செய்கிறாய். 

அடுத்த நொடி ராதிகா கொந்தளிக்கிறார். எதற்காக பாக்யாவிற்கு ஃபோன் செய்து இவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை நீங்கள் உங்கள் அப்பா அம்மாவிடம் தானே கேட்க வேண்டும் என கோபித்துக் கொள்கிறார். இதனால் அதிர்ச்சி அடையும் கோபி, 25 வருடங்கள் அவர்களிடமிருந்து கஷ்டப்பட்டேன். இனி வாழ்நாள் முழுவதும் இவளிடம் கஷ்டப்பட வேண்டுமா என புலம்பிக்கொண்டே அமர்கிறார்.

மறுபக்கம் அமிர்தாவின் வீட்டுக்கு போகிறார் எழில், அங்கு அமிர்தாவின் பெற்றோர் உங்கள் வீட்டில் இருந்து யாராவது வந்து அமிர்தாவை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்க வேண்டும் என கூற, நான் சம்மதம் சொல்லச் சொல்கிறேன் என கூறுகிறார் எழில்.  இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!