bharathi kannamma : தாலி கட்ட முடிவு செய்த பாரதி..பளார் விட்ட கண்ணம்மா.. இன்றைய முழு எபிசோடு

Published : Nov 01, 2022, 01:58 PM ISTUpdated : Nov 01, 2022, 02:00 PM IST
bharathi kannamma : தாலி கட்ட முடிவு செய்த பாரதி..பளார் விட்ட கண்ணம்மா.. இன்றைய முழு எபிசோடு

சுருக்கம்

வெண்பா கழுத்தில் எதற்காக இவ்வளவு அவசரமாக தாலி கட்ட வந்த என அனைவரும் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து போய் நிற்கிறார் பாரதி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி வெண்பா திருமண படலம் நடைபெற்று வருகிறது. முன்னதாக திருமண மண்டபத்தில் இருந்து தப்பித்து வந்த வெண்பா பாரதியுடன் கல்யாணம் செய்வதற்காக ஒரு கோவிலுக்கு வந்து சேர்கிறார். அதே கோயிலுக்கு வந்து காத்திருக்கும் பாரதி லேபிற்கு போன் செய்ய அங்கிருந்து வரும் தகவல் அவருக்கு அதிர்ச்சியளிக்கிறது. பின்னர் தற்போது கிளம்பி விடலாம் எனும் முடிவுக்கு வருகிறார் பாரதி. 

அவர் கிளம்பும் நேரத்தில்அங்கு வரும் வெண்பா. ஏன் இங்கேயே நிற்கிறார் வா திருமணம் செய்து கொள்ளலாம் என கூறுகிறார். அப்போது பாரதி இன்னும் இரண்டு நாள் கழித்து திருமணம் செய்யலாம் இருவரும் எங்காவது சென்றுவிடலாம் என கூறுகிறார். உடனே கடுப்பாகும் வெண்பா, நீ சென்று விட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். 

மேலும் செய்திகளுக்கு..Bigg Boss Tamil Season 6 Promo மீண்டும் தனலட்சுமியை ஒரண்டை இழுக்கும் அசீம்...கடுப்பான விக்ரமன்...

பின்னர் கோவிலுக்குள் செல்கிறார் பாரதி. அப்போது ஐயர் மாலையை  போட சொல்ல தயங்கி நிற்கிறார் பாரதி. உடனே மாலையை எடுத்து கையில் கொடுத்து போட வைக்கிறார் வெண்பா. தொடர்ந்து தாலியை கட்ட வற்புறுத்துகிறார்.  பாரதியும் தாலியை எடுக்க அந்த நேரத்தில் வரும் கண்ணம்மா கடுமையாக பேசுகிறார். தொடர்ந்துவெண்பாவின் கழுத்தில் பளார் என அறை விடும் கண்ணம்மா, பாரதியை வசைபாடுகிறார்.

ஒரு வேலை நீ வெண்பா கழுத்தில் தாலி கட்டி இருந்தால் சும்மா விட்டிருக்க மாட்டேன். கட்டின மனைவி உயிருடன் இருக்கையில் தாலி கட்டினால் என்ன நடக்கும் என சட்டம் சொல்கிறது தெரியுமா? உன்னை இழுத்துக் கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷனில் விட்டிருப்பேன் என திட்டுகிறார். நீங்கள் ஆம்பளையாக இருந்தால் அவள் கழுத்தில் தாலி கட்டுங்கள் பார்க்கலாம் என மிரட்டுகிறார்.  இதை அடுத்து தலை குனிந்து நிற்கும் பாரதியிடன் குடும்பத்தார் அத்தனை பேரும் எக்கச்சக்க கேள்வி கணைகளை தொடுக்கின்றனர்.

வெண்பா கழுத்தில் எதற்காக இவ்வளவு அவசரமாக தாலி கட்ட வந்த என அனைவரும் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து போய் நிற்கிறார் பாரதி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!