Raja Rani 2 : சந்தியாவால் உறைந்து போன குடும்பம்... கலங்கி நிற்கும் சரவணன்...இன்றைய எபிசோட்

Published : Oct 31, 2022, 03:25 PM IST
Raja Rani 2 : சந்தியாவால் உறைந்து போன குடும்பம்... கலங்கி நிற்கும் சரவணன்...இன்றைய எபிசோட்

சுருக்கம்

சந்தியாவை நினைத்து ஏங்கியபடி இருக்க, பின்னர் அவருக்கு போன் செய்கிறார். எல்லோரும் நார்மல் ஆகிட்டாங்களா என சந்தியா கேட்க இல்ல எல்லாரும் வருத்தப்படுகிறார்கள் எனக் கூறுகிறார் சரவணன் இருவரும் பேசிக் கொண்டிருக்க இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

ராஜா ராணி 2-வில் சந்தியா கர்ப்பமாக இருப்பதாக கூறி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். இது ரசிகர்களுக்கும் சரவணனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் சந்தியாவின் மாமியார் சிவகாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இதன் பிறகு சந்தியாவை வீட்டிற்கு அழைத்து செல்ல சிவகாமி, சரவணன் இருவரும் வந்திருந்தனர். ஆனால் மெடிக்கல் டெஸ்டில் சந்தியாக கர்ப்பமாக இல்லை என ரிசல்ட் வர மொத்த குடும்பமும் அதிர்ந்து போனது.

பின்னர் ஏமாற்றத்துடன் சிவகாமி வீட்டிற்கு கிளம்ப சரவணன் சந்தியாவிற்கு ஆறுதல் கூறி வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என தெம்பூட்டி விட்டு சென்றுவிடுகிறார். வீட்டிற்கு செல்லும் சிவகாமி சரவணன் இருவரும் ஆரத்தி தட்டுடன் காத்திருக்கும் அர்ச்சனாவை பார்த்துஅதிர்ச்சி அடைய, சந்தியா எங்கே என கேட்கிறார். அப்போது அவர் கர்ப்பமாக இல்லை எனக் கூறி விட்டு சிவகாமி கண்களை தண்ணீருடன் வீட்டிற்குள் சென்று விடுகிறார்.

பின்னர் சந்தியாவை பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருக்க சரவணன் வருத்தத்துடன் எழுந்து உள்ளே சென்று விடுகிறார். இதைப் பற்றி பேச வேண்டாம் எனக் கூறும் சிவகாமி அழுது கொண்டே எழுந்து செல்கிறார். இந்த பக்கம் காலையில் எழுந்ததும் சந்தியா, சரவணன் சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்துக்கொண்டு பார்வதி கொடுத்த டிரஸ் மற்றும் சரவணன் வாங்கி கொடுத்த ஷூவை போட்டுக்கொண்டு கடுமையான பயிற்சியில் ஈடுபடுகிறார். அடுத்ததாக ரூமில் சரவணன், சந்தியாவை நினைத்து ஏங்கியபடி இருக்க, பின்னர் அவருக்கு போன் செய்கிறார். எல்லோரும் நார்மல் ஆகிட்டாங்களா என சந்தியா கேட்க இல்ல எல்லாரும் வருத்தப்படுகிறார்கள் எனக் கூறுகிறார் சரவணன் இருவரும் பேசிக் கொண்டிருக்க இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!