bharathi kannamma : சாந்தி கழுத்தில் அருவாமனையை வைத்த கண்ணம்மா..வெண்பாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி

By Kanmani P  |  First Published Oct 29, 2022, 6:15 PM IST

தனக்கு தெரியாது என்கிற பதிலையே சாந்தி கூற அருவாமனையை எடுத்து கழுத்தில் வைத்து இப்போது கூறு என்கிறார். பின்னர் வெண்பா, பாரதியை திருமணம் செய்து கொள்ள சென்று விட்டார் என உண்மையை போட்டு உடைக்கிறார்.


பாரதி கண்ணம்மாவில் தற்போது டுவிஸ்டுக்கு மேல் டுவிஸ்ட் நடைபெற்று வருகிறது. திருமண மண்டபத்தில் முகூர்த்த புடவை வாங்கும் வரை அமைதியாக இருந்த வெண்பா.  பின்னர் ரூமிற்குள் சென்றவுடன் ஜன்னல் வழியாக இறங்கி தப்பித்து விடுகிறார் வெண்பா. இந்த உண்மை சாந்திக்கு மட்டுமே தெரியும். பின்னர் கண்ணம்மா மற்றவர்களிடம் ரூம் கதவை உடைக்க சொல்ல உள்ளே சென்று பார்த்தபோது வெண்பா இல்லாததால் அதிர்சியடைந்தனர். 

பின்னர்  ஷர்மிளா தனது மானமே சென்று விட்டதாக கூறி அழுகிறார். அந்த நேரத்தில் சாந்தி அமைதியாக இருந்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என நினைத்து அழுவது போல நடிக்கிறார். மறுபுறம் காரில் சென்று கொண்டிருக்கும் வெண்பா பாரதிக்கு போன் செய்து கோயில் வாசலில் வந்து காத்திரு, அங்கு மாலைக்கு சொல்லி இருக்கிறேன் வாங்கி வை எனக் கூறுகிறார். ஆனால் பாரதி இன்னும் வீட்டில் தான் இருப்பதாக கூறுகிறார். என்னை ஏமாற்றி விட்டால் நான் இப்படியே காரை கொண்டு போய் எங்காவது ஆக்சிடென்ட் செய்துவிட்டு பிணமாக தான் உன் கண் முன்னே தென்படுவேன் என மிரட்டுகிறார் வெண்பா.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு...பொறுக்க முடியாமல் கொந்தளித்த கமல்ஹாசன்...அதிர்ந்து போன அசீம் ...பிக்பாஸ் ப்ரோமோ

இதையடுத்து இன்னும் பத்து நிமிடத்தில் நான் வந்து விடுவேன் என பாரதி கூறுகிறார் வந்துவிடும் என என்கிற மனநம்பிக்கைகள் தெரிவிக்கிறார் பாரதி. இந்தப் பக்கம் சாந்தி மீது சந்தேகம் அடையும் கண்ணம்மா சாந்தியின் கன்னத்தில் பளார் என அறைவிட்டு,  வெண்பா எங்கே என கேட்கிறார். அப்போதும் தனக்கு தெரியாது என்கிற பதிலையே சாந்தி கூற அருவாமனையை எடுத்து கழுத்தில் வைத்து இப்போது கூறு என்கிறார். பின்னர் வெண்பா, பாரதியை திருமணம் செய்து கொள்ள சென்று விட்டார் என உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

click me!