bharathi kannamma : ஒரு வழியாக என்டுக்கு வந்த வெண்பா கதை...ஷர்மிளா கொடுத்த ஷாக்..

Published : Nov 04, 2022, 04:07 PM ISTUpdated : Nov 04, 2022, 04:10 PM IST
bharathi kannamma : ஒரு வழியாக என்டுக்கு வந்த வெண்பா கதை...ஷர்மிளா கொடுத்த ஷாக்..

சுருக்கம்

ரோஹித்தை விவாகரத்து செய்தால் 100% சொத்தையும் ஒப்படைத்து விடுவேன் என பத்திரத்தில் குறிப்பிட்டு இருப்பதாக அனைத்து டாக்குமெண்டையும் கொடுக்க வெண்பா அதிர்ச்சியில் மூழ்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை வெண்பா திருமணம் செய்து கொள்வதற்காக ஏமாற்றி அழைத்து வர அதை அறிந்த கண்ணம்மா மற்றும் குடும்பத்தினர் திருமணத்தை தடுத்து நிறுத்தி இருந்தனர். அதோடு தன்னை ஒதுக்கி தள்ளிவிட்டு புறப்பட்டவர்களை கண்டு பாரதி உடைந்து போய் நின்று இருந்தார். இதை தொடர்ந்து ரோஹித் வெண்பாக்கு மாலை போட போக வெண்பா தடுத்து நிறுத்தினார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.

இன்று... பண்றது எல்லாம் பண்ணிட்டு இனி இன்னும் என்ன பண்ண போற என ஷர்மிளா - வெண்பாவை திட்டுகிறார். இதையடுத்து கல்யாணமும் நடந்தேறுகிறது. ஒரு வழியாக ரோஹித் வெண்பா கழுத்தில் தாலி கட்டுகிறார். அடுத்து இந்த பக்கம் கண்ணம்மா வீட்டில் எல்லோரும் அமர்ந்து பாரதி செய்த விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருக்க அவர் ஒரு படிச்சு முட்டாள், அவரை கோபக்காரனாக, முன்கோபியாக பார்த்திருக்கிறேன். ஆனால் முதன்முறையாக முட்டாளாக பார்க்கிறேன் என கடுமையாக சாடுகிறார் கண்ணம்மா.

மேலும் செய்திகளுக்கு....janhvi kapoor : டவுசருடன் பொது வெளியில் ஜான்வி கபூர்...வைரல் போட்டோஸ் இதோ

பின்னர் கீழே லட்சுமியிடம் ஹேமா அழுது கொண்டே நான் ஒரு அனாதை என கதறிக் கொண்டிருக்க இதனால் வருத்தப்படும் லட்சுமி, உண்மையை உடைக்க பார்க்கிறார். அந்த நேரத்தில் வரும் சௌந்தர்யா தடுத்து நிறுத்த.. ஹேமா - லட்சுமி ஏதோ சொல்ல வந்தா அது என்ன என கேட்கிறார். உடனே சௌந்தர்யா உன் மேல அன்பு செலுத்த தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, லட்சுமி, சமையல் அம்மா என எல்லோரும் இருக்காங்க என்று தான் சொல்ல வந்தாள் என மாற்றி கூற, உடனே லட்சுமியும் அதை புரிந்து கொண்டு ஆமாம் என சொல்லுகிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வரும் ரோஹித் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக உள்ளே வர பிறகு ஷர்மிளா தன்னுடைய சொத்தில் பெரும்பாலான பகுதியையும், கம்பெனியின் 60 சதவீத ஷேரில் ரோஹித் பேரில் எழுதி வைத்திருப்பதாக சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறார். அதோடு ரோஹித்தை விவாகரத்து செய்தால் 100% சொத்தையும் ஒப்படைத்து விடுவேன் என பத்திரத்தில் குறிப்பிட்டு இருப்பதாக அனைத்து டாக்குமெண்டையும் கொடுக்க வெண்பா அதிர்ச்சியில் மூழ்குகிறார். இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Ethirneechal Thodargiradhu : பகடைக்காயாக மாறும் தர்ஷினி... புது குண்டை தூக்கிப்போட்ட அன்புக்கரசி...!