Rashmika mandanna : இரவு பார்ட்டிக்கு சென்று மூச்சுமுட்ட குடிக்கும் ராஷ்மிகா, பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் படியான காட்சிகள் வீடியோவில் இடம்பெற்று உள்ளன.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா. இவர் தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார். இவர் கைவசம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்கள் உள்ளன. அதன்படி தமிழில் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. வம்சி இப்படத்தை இயக்குகிறார்.
அதேபோல் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் ராஷ்மிகா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் ராஷ்மிகா. முதல்பாகத்தை விட பிரம்மாண்டமாக இப்படம் தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... முதல் பாகம் ரிலீஸ் ஆவதற்குள் ‘பொன்னியின் செல்வன்’ 2-ம் பாகத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட மணிரத்னம்
இதுதவிர இந்தியில் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு என்கிற படத்திலும் அமிதாப் பச்சனுடன் இணைந்து குட் பாய் என்கிற படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. இதில் குட் பாய் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் இப்படம் திரைகாண உள்ளது.
இந்நிலையில், அப்படத்தில் இருந்து வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பாடல் வைரலாகி வருகிறது. அதில் இரவு பார்ட்டிக்கு சென்று மூச்சுமுட்ட குடிக்கும் ராஷ்மிகா, பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஹிக் சாங் என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு அமித் திரிவேதி இசையமைத்து உள்ளார். இப்படத்தை விகாஸ் இயக்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ‘கில்லி’ முத்துப்பாண்டியின் காதல் தோல்வி... ஃபீல் பண்ணிய பிரகாஷ் ராஜ் - பதிலுக்கு திரிஷா தந்த கியூட் ரிப்ளை