விடுதலை சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகு சூரி அதிரடி நாயகனாக மாறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம்.
வெண்ணிலா கபடி குழு மூலம் நகைச்சுவை நடிகராக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சூரி. தற்போது முன்னணி கதாநாயகனாக மாறிவிட்டார். இவர் பிரபல நடிகர்களுடன் நண்பனாக நடித்த புகழ்பெற்ற சூரி தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை என்னும் படத்தில் நாயகனாக நடித்த வருகிறார். இந்த படத்திற்காக பல முயற்சிகளை எடுத்துள்ள சூரி தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ள வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
இந்த படத்தில் காமியோ ரோலில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ மேனன் உள்ளிட்டோர் காமியோவில் நடிக்க போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கும் சூரிக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜூமேனன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...உதவி பெறுபவர்கள் தான் காலில் விழ வேண்டுமா? அதிரடி முடிவெடுத்த ராகவா லாரன்ஸ்
பல ஆண்டுகளாக படமாக்கப்பட்டு வரும் இந்த படம் தற்போது கொடைக்கானலில் பிரம்மாண்ட சண்டை காட்சிகளுடன் முடிவடைய உள்ளது. இதற்காக பாகுபலி, அசுரன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களில் சண்டைக் காட்சிகளை அமைத்த பீட்டர் ஹெயின் என்பவர் சண்டைக் காட்சிகள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறது. இந்த சண்டை காட்சியில் நாயகன் சூரி ஜாக்கிஜான் ரேஞ்சுக்கு பறந்து பறந்து சண்டையிடுவதாக தகவல் கசிந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...பள்ளி மாணவிகளை சந்தித்த கமல் ஹாசன்..வைரலாகும் வீடியோ இதோ
எனவே விடுதலை சூரிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைக்குப் பிறகு சூரி அதிரடி நாயகனாக மாறினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லையாம். சூர்யாவின் வாடிவாசல் படம் துவங்க உள்ளதால் இந்த படத்தை விரைவில் முடித்து திரைக்கு கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறார் வெற்றிமாறன். அதன்படி இந்த வருட இறுதிக்குள் படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.