
பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி 40 நாட்களை எட்டி உள்ள நிலையில், நிகழ்ச்சி பரபரப்பான சண்டை, சச்சரவுகளுக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெறும் டாஸ்க்கை மையமாக வைத்தே, போட்டியாளர்கள் சண்டை போட்டு வருகிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் நடந்த அரண்மனை டாஸ்கின் போதும் போட்டியாளர்கள் சண்டை போட்டு கொண்டது அனைவரும் அறிவர்.
இதுகுறித்து இன்றைய புரோமோவில் கூட.... படைத்தளபதியாக இருந்த அசீம் அனைவர் மீதும் பர்சனலாக கோபத்தை காட்டியதாக கமல்ஹாசனிடம் சக போட்டியாளர்கள் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. கமல்ஹாசனும் மூன்றாவது புரோமோவில், உங்களின் குணம் தான் உங்களின் தரத்தை காட்டும் என அசீமை பார்த்து காட்டமாக பேசினார்.
இவரை தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அத்து மீறி நடந்து கொண்டவர் என்றால் அது ராபர்ட் மாஸ்டர் தான். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே, ரக்ஷிதா மீது ஒரு கண் அவருக்கு இருந்த நிலையில், அரண்மனை டாஸ்கில் சற்று அத்துமீறி நடந்து கொண்டதை பார்க்க முடிந்தது. ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் எப்படி பழகுகிறார் என்பதை அறிந்து கொண்ட, ரக்ஷிதா அவரிடம் இருந்து விலகி விலகி போனதையும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இவர் செய்த அட்ராசிட்டியை வெளியில் இருந்து, பாத்து வந்த அவரது காதலி தற்போது காண்டாகி... ராபர்ட் மாஸ்டர் அன்பளிப்பாக கொடுத்த மோதிரத்தை, அவருக்கு பொருட்கள் அனுப்பும் போது அந்த பெட்டியில் போட்டு அனுப்பி, பிக்பாஸ் வீட்டின் உள்ளேயே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். இந்த மோதிரத்தை பார்த்து செம்ம ஷாக்கான ராபர்ட் மாஸ்டர் இது குறித்து குயின்சியிடம் பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.