தளபதி விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில், அவரின் 'தமிழக வெற்றிக் கழக' நிர்வாகிகள் ஏற்று கொண்ட, உறுதி மொழி அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி விஜய் யாரும், எதிர்பார்த்திடாத நேரத்தில்.. திடீர் என தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, கட்சி துவங்குவதை உறுதி செய்தார். மேலும் நாடாளு மன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்பதை உறுதி செய்த விஜய், சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளதாக அறிவித்தார். மேலும் தற்போது நடித்து வரும் 'கோட்' திரைப்படம் மற்றும் அடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ள மற்றொரு படத்தில் நடித்து முடித்த பின்னர், திரையுலகை விட்டே மொத்தமாக விளக்குவேன் என அறிவித்தார்.
தளபதியின் இந்த துணிச்சலான முடிவு ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தினாலும்... பலரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இந்த முடிவே தளபதி விஜய்யின் கட்சியை பல மடங்கு வலுவாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்களும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள். தளபதி ஷூட்டிங் பணியில் பிசியாக இருந்தாலும், கட்சி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
undefined
இந்நிலையில் தளபதியின் 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சி நிர்வாகிகள் எடுத்து கொண்ட, உறுதி மொழி குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில்... "நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைக்காகவும், தமிழ் மண்ணில் இருந்து வீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னை தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும், நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை சகோதரத்துவம் மத நல்லிணக்கம் சமத்துவம் ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனி மனிதராக செயல்படுவேன். மக்களாட்சி மதசார்பின்மை சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நல சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம், ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை கலைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பெங்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.