கவுண்டமணி - யோகி பாபு இணைந்து கலக்கியுள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு !

Published : Feb 19, 2024, 12:12 PM ISTUpdated : Feb 19, 2024, 12:13 PM IST
கவுண்டமணி - யோகி பாபு இணைந்து கலக்கியுள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா' படப்பிடிப்பு நிறைவு !

சுருக்கம்

முதல் முறையாக, யோகி பாபு மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்துள்ள 'ஒத்த ஓட்டு முத்தையா ' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது.  

Cine craft productions தயாரிப்பில் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கதையின் நாயகனாக கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் "ஒத்த ஓட்டு முத்தையா". கவுண்டமணி அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார்.

பிரமாண்ட கேக் வெட்டி.. SK23 படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தோடு பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்! 

கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த "ஒத்த ஓட்டு முத்தையா" படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது. கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..'மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்து அவர்களின் மகன் வாசன்கார்த்தி & மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

அஸ்தமனமாக போகும்.. உதயத்தூர் கிராமம் உருவாக்கிய உதயம் தியேட்டர்! நெகிழ்ச்சி பின்னணி குறித்த தகவல்!

கவுண்டமணி மனைவியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.. இது தவிர- சிங்கமுத்து..தாரணி..ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குனர் சாய் ராஜகோபால் டி.எஸ்.ஆர்.சீனிவாசன்-(ஹட்ச் டாக்) சென்றாயன்..கூல் சுரேஷ்..சதீஷ் மோகன்..காதல் சுகுமார் சிசர் மனோகர் ஆதேஷ் பாலா..மங்கி ரவி..பெஞ்சமின்.. கொட்டாச்சி.. உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்