
மலயாளத்தில் சுமார் 19 ஆண்டுகள் பயணித்த பிறகு தான் தமிழ் மொழியில் அறிமுகமானார் மம்மூட்டி, தனது 70 வயதிலும் புது புது கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "நண்பகல் நேரத்து மயக்கம்" என்ற திரைப்படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருப்பார் ரம்யா பாண்டியன். தெரியாத ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருப்பவர்களோடு சகஜமாக பழகும் ஒரு நாயகனின் வினோதமான கதைக்களம் கொண்ட படம் தான் இது.
காவல்துறை அதிகாரியாக பல திரைப்படங்களில் நடிகை மம்மூட்டி நடித்திருந்தாலும், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "கண்ணூர் ஸ்குவாட்" என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தை கண்ட ரசிகர்களை, அந்த கதைக்குள்ளேயே அழைத்து சென்றார் மம்மூட்டி என்றால் அது மிகையல்ல.
இதுவரை எந்த முன்னணி ஹீரோவும் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை மிக துணிச்சலாக இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்துவரும் மம்மூட்டி அவர்கள் ஏற்று நடித்த திரைப்படம் தான் "காதல் தி கோர்". உண்மையில் இந்த திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரம் பலருக்கு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான "புழு" என்கின்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மிக எளிமையான கதைக்களம் என்ற பொழுதும் திரில்லிங்குடன் அதை கலந்து கூறி, மம்மூட்டியை ஒரு நெகட்டிவ் ரோலில் நடிக்க வைத்து அசத்தியிருப்பார் பிரபல இயக்குனர் ரத்தீனா.
தமிழ் மொழியில் பல திரைப்படங்களில் நடித்துள்ள மம்மூட்டி, இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான "பேரன்பு" என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மையில் பல நடிகர்கள் நடிக்க முன்வராத ஒரு கதாபாத்திரம் என்றாலும், அதை மிக மிக நேர்த்தியாக நடித்த அசத்தியிருப்பார் மம்மூட்டி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.