காஷ்மீரை பாலஸ்தீனத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜின் சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் விவாதப்பொருளாக மாறி இருக்கிறது.
பான் இந்தியா அளவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அதில் பரபரப்பான அரசியல் கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். அவரின் கருத்துக்கள் சில சமயங்களில் விவாதப் பொருளாகவும் மாறும். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியது தற்போது சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி உள்ளது.
அதில் காஷ்மீரை பாலதீனத்தோடு ஒப்பிட்டு பேசி இருக்கிறார் பிரகாஷ் ராஜ். அவர் கூறியதாவது : “பாலஸ்தீனத்திற்கு நீதி கிடைத்துள்ளது. நமக்கு தேவை நீதி தான், நாம் நிலைப்பாட்டை எடுக்க கூடாது. நிலைப்பாடு எடுப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. நீங்கள் அவர்களுக்கான நிலத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுங்கள் அவ்வளவுதான்.
இதையும் படியுங்கள்... “மசூதிகளை தோண்டினால் கோயில்கள் கிடைக்கும், ஆனா கோயில்களை தோண்டினால்..” பிரகாஷ் ராஜ் கருத்தால் சர்ச்சை..
அவர்கள் கண்ணியத்துடன் அங்கு எப்படி வாழ்கிறார்கள் என்பது உங்களுக்கு தேவையில்லாத ஒன்று. நாம எப்படி இருக்கோம். நம்ம பெரிய ஆளாக இருக்க நினைக்கிறோம். காஷ்மீரில் ஆதிக்கம் செலுத்த நினைக்கிறோம். அதை நாம் செய்ய கூடாது. நாம் எப்போதும் நீதியை நிலைநாட்ட வேண்டும் என பேசி இருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்துள்ளன. அவரின் பேச்சை கேட்ட நெட்டிசன்கள், அவர் சினிமாவில் மட்டுமல்ல ரியல் லைஃபிலும் வில்லன் போல் பேசி வருவதாக சாடி வருகின்றனர். இதனால் அவரது பேச்சு பூதகரமாகி இருக்கிறது.
Prakash Raj compares Palestine with Kashmir- Says give them their land pic.twitter.com/d28WIaf0pC
— Megh Updates 🚨™ (@MeghUpdates)இதையும் படியுங்கள்... வீட்டை விட்டு வெளிய போ... பரணிக்கு அதிர்ச்சி கொடுத்த சண்முகம் - அண்ணா சீரியலில் அடுத்த டுவிஸ்ட்