
நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் GOAT. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார். மேலும் சினேகா, லைலா, பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, வைபவ், ஜெயராம், மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
கோட் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் தொடங்கியது. முதலில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடனமாடிய பாடல்காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து தாய்லாந்து பறந்த படக்குழு அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சியை படமாக்கியது. பின்னர் மூன்றாம் கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்தினர்.
இதையும் படியுங்கள்... என்னோட வெற்றிக்கு பின்னாடி என் கணவர் இருக்கிறார்... விக்கி பற்றி பேசுகையில் வெட்கத்தில் முகம் சிவந்த நயன்தாரா
தற்போது புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் கோட் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி உள்ளது. இந்த ஷெட்யூலுக்காக மீசை தாடி எல்லாம் சுத்தமாக ஷேவ் செய்து யங் லுக்கிற்கு மாறி இருக்கிறார் விஜய். இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதில் யங் லுக்கில் அவர் நடிக்கும் காட்சிகளை தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு படமாக்கி வருகிறார்.
கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யை காண தினசரி ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னை காண வந்த ரசிகர்களை பார்க்க காரில் இருந்து இறங்கி கையசைத்துவிட்டு சென்ற விஜய், தற்போது இன்று படப்பிடிப்பு முடிந்ததும் தன்னை காண குவிந்திருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார். யங் லுக்கில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகிறது.
இதையும் படியுங்கள்... பாலிவுட் விழாக்களில் செருப்பு போட்டுச் சென்றால் தப்பா... உருவக் கேலி குறித்து விஜய் சேதுபதி வேதனை
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.