விஜய் கூட செய்யாத உதவியை... விஜயகாந்த் மகனுக்காக செய்ய முன்வந்த ராகவா லாரன்ஸ் - குவியும் பாராட்டு

By Ganesh A  |  First Published Jan 10, 2024, 1:56 PM IST

விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியனுக்கு சினிமாவில் உதவிக்கரம் நீட்ட தான் தயாராக இருப்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.


கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ந் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவர் மறைந்து இரண்டு வாரங்களுக்கு மேல் ஆனாலும் அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்த தினத்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் திரைப்பிரபலங்களும் கேப்டன் விஜயகாந்தின் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது தாயாருடன் சென்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன் மற்றும் ஷண்முகப்பாண்டியன் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது பிரேமலதாவின் சகோதரி ராகவா லாரன்ஸிடம், ஷண்முகப் பாண்டியனை நீங்கதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என சொன்னாராம்.

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... கார்த்திகை தீபம் சீரியல் : நீ செஞ்சது நம்பிக்கை துரோகம்... பல்லவியை வெறுக்கும் கார்த்தி; அதிர்ச்சியில் தீபா!

அவர் சொன்ன பின்னர் கேப்டனின் மகனுக்கு நம்மால் முடிந்த உதவி ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய லாரன்ஸ் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்தால் தமிழ் திரையுலகில் எத்தனையோ பேர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி இளம் நடிகர்களுக்கு உதவும் விதமாக கேமியோ ரோலிலும் நடித்து கொடுத்து உதவி இருக்கிறார். 

அதனால் அவரின் மகனுக்கு என்னால் முடிந்த உதவியாக அவர் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்யப்போகிறேன். ஒருவேளை அவர் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டிக்கோ அல்லது ஃபைட்டுக்கோ கேமியோ ரோலில் நடிக்க அழைத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

மேலும் யாரேனும் இயக்குனர்கள் டபுள் ஹீரோ கதை ஏதேனும் வைத்திருந்தால் என்னை அணுகுங்கள், நான் ஷண்முகப் பாண்டியன் உடன் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று லாரன்ஸ் கூறி உள்ளார். அவரின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். மறுபுறம் விஜய்யையும் விமர்சித்து வருகின்றனர். ஏனெனில் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து அவருக்கு ஒரு மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தவர் கேப்டன் தான். தற்போது அவரது மகனுக்கு விஜய் எந்தவித உதவியும் செய்யவில்லை என விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கே.ஜே.யேசுதாஸ் பிறந்தநாள்.. 84 வயதிலும் இசை ராஜ்ஜியம் நடத்தும் கான கந்தர்வனின் இனிமையான இசை பயணம் - ஓர் பார்வை

click me!