கிளீன் ஷேவ் லுக்கில் மாஸ் என்ட்ரி.. ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய் - G.O.A.T பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்!

Ansgar R |  
Published : Jan 09, 2024, 10:19 PM IST
கிளீன் ஷேவ் லுக்கில் மாஸ் என்ட்ரி.. ரசிகர்களை சந்தித்த தளபதி விஜய் - G.O.A.T பட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரல்!

சுருக்கம்

Thalapathy Vijay Clean Shave Look : தளபதி விஜய் அவர்கள் இப்பொது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான "லியோ" திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் தற்பொழுது நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. 

"தளபதி விஜய் - தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என்கின்ற உலக அளவில் புகழ்பெற்ற ஒரு தலைப்புடன் இந்த திரைப்படம் உருவாக துவங்கியுள்ளது. ஏற்கனவே தாய்லாந்து, ஹைதராபாத், சவுத் ஆப்பிரிக்கா உள்ளிட்ட இடங்களில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது சென்னையில் இப்பட பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

Mid Week Eviction: செம்ம ட்விஸ்ட்! திடீர் என நடந்த மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்!

கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவை அடுத்து, அவருக்கு நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்திய தளபதி விஜய் அவர்கள் அடுத்த நாளே தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். அதனை முடித்துக் கொண்டு உடனடியாக GOAT திரைப்பட படப்பிடிப்பு ஷூட்டிங்கை அவர் தொடர்ந்தார். 

இந்நிலையில் சென்னையில் இந்த படத்திற்கான படபிடிப்பு நடந்து வரும் நிலையில், முற்றிலும் கிளீன் ஷேவ் செய்த லுக்கில் தனது ரசிகர்களை காண தளபதி விஜய் அவர்கள் வந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. கிளீன் ஷேவ் செய்த லுக்கில் தளபதி விஜய் அவர்கள் மிகவும் இளமையாக தோற்றம் அளிக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் இரு வேறு கதாபாத்திரங்கள் ஏற்று தளபதி விஜய் அவர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் நடிகைகளான பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா மற்றும் லைலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நடிகர்களும் இந்த படத்தில் உள்ளனர். 

Bayilvan Ranganathan: என்னது தளபதி விஜயின் மனைவி இந்த நடிகரின் முன்னாள் காதலியா? கொளுத்தி போட்ட பயில்வான்..!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்