
பாலிவுட் உலகில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் கத்ரீனா கைஃப் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் "மெரி கிறிஸ்மஸ்". தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களும் நடித்துள்ளார்.
பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ள நிலையில், தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதியும், நடிகை கத்ரீனா கைஃப் அவர்களும் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹிந்தி திரைப்படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் காட்டமாக பதில் அளித்ததும் குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஆகிய இருவரும் தற்பொழுது பேட்டி அளித்துள்ளனர். அப்பொழுது நடிகர் விஜய் அவர்களுடைய நடனம் குறித்து கேள்வி கேட்ட பொழுது, தான் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடனமாடியுள்ளதை நினைவுகூர்ந்தார் கத்ரீனா.
மேலும் பேசிய அவர், விஜய் ஒரு அற்புதமான டான்சர், நான் என் வாழ்க்கையில் நடித்த முதல் விளம்பர படம் அதுதான். அப்பொழுது எனக்கு வயது 18, பிரபல குளிர்பான நிறுவன விளம்பரத்தில் நானும் விஜய்யும் நடிப்பதாக இருந்தது. அப்பொழுது நான் நடனத்தில் தேர்ச்சி பெறவில்லை, ஆனால் விஜய் மிக நேர்த்தியாக நடனமாடுவர் என்று கூறியுள்ளார்.
Rashid Khan: அதிர்ச்சி... பிரபல பாடகர் உஸ்தாத் ரஷித் கான் மரணம்! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.