- Home
- Gallery
- விஷ்ணு விஷால் தான் வில்லன்.. அப்போ ஹீரோ யாரு? பக்காவா ஒரு டார்க் காமெடி கதை - அடுத்த படத்தை அறிவித்த கோகுல்!
விஷ்ணு விஷால் தான் வில்லன்.. அப்போ ஹீரோ யாரு? பக்காவா ஒரு டார்க் காமெடி கதை - அடுத்த படத்தை அறிவித்த கோகுல்!
Actor Vishnu Vishal : கடந்த 2011ம் ஆண்டு வெளியான நடிகர் ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் கோகுல். இவர் இயக்கத்தில் இப்பொது சிங்கப்பூர் சலூன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

Director Gokul
பிரபல இயக்குனர் கோகுல் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் ஆகும். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ரௌத்திரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் கோகுல், "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", "காஷ்மோரா", "ஜூங்கா" மற்றும் "அன்பிற்கினியால்" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றவர் அவர்.
இனிமே நோ வில்லன்... ஒன்லி ஹீரோ! அதிரடியாக அறிவித்த விஜய் சேதுபதி - திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
Vijaysethupathi
இந்நிலையில் ரபல நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்க உள்ள அவருடைய அடுத்த திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் கோகுல். இந்த படம் குறித்து அண்மையில் பேசி உள்ளார், அந்த பேட்டியில் விஷ்ணு விஷால் நடிப்பில் அவர் இயக்கப் போகின்ற திரைப்படத்தைக் குறித்து பல தகவல்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
Vishnu Vishal Movie
இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகும், மேலும் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகர் அந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சில உண்மை சம்பவங்களை கொண்ட ஒரு டார்க் காமெடி மற்றும் ஆக்சன் என்டர்டைனர் திரைப்படமாக இது அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். 8கும் மேற்பட்ட நாடுகளில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 3 மாதங்களில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தி தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கலாமா? விஜய் சேதுபதிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி!