
கமலோடு காதல் கொண்ட ஸ்ரீவித்யா
இன்று இந்திய சினிமாவே வியந்து போற்றும் அளவிற்கு உச்ச நடிகராக திகழ்ந்துவரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ஆரம்ப கட்ட வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளில் ஸ்ரீவித்யா கலந்திருக்கிறார் என்று கூறினால் அது மிகையல்ல. இப்பொழுது வைரலாகி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பழைய வீடியோ ஒன்றிலும் கூட தனக்கு 19 வயதில் இருக்கும் பொழுது தான் அபூர்வராகங்கள் படத்தில் நடித்தேன்.
அப்பொழுது அந்த படத்தில் நான் ஒரு திறமையான நடிகன் என்பதை எனக்கு உணர்த்தியதே ஸ்ரீவித்யா தான் என்று அவர் கூறியதும். அவர் எனக்கு தோழி மட்டுமல்ல எனக்கு காதலியும் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த படம் மூலமாக எங்களுக்குள் ஏற்பட்ட காதல் கடைசி வரைக்கும் இருந்தது, அது கல்யாணத்தில் தான் முடிய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று அவர் பேசியது பலரும் அறிந்ததே.
அதேபோல ஸ்ரீவித்யாவின் இறப்பிற்கு முன்பு ஒரு மலையாள செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கமலும் தானும் உருகி உருகி காதலித்து வந்தாலும், இருவருடைய எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன்னுடைய அம்மா அந்த காதலுக்கு முட்டுக்கட்டை போட்டதால் இருவரும் பிரிந்து விட்டதாக அவர் கூறினார்.
அதன் பிறகு தான் ஸ்ரீவித்யா ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார், ஆனால் அதற்கும் அவர்கள் வீட்டில் எதிர்ப்பு வந்த பொழுது வீட்டினுடைய எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவருடைய இறுதி நிமிடங்களில் நடந்த சில விஷயங்களை ஒரு தனியார் செய்து நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் மூத்த தமிழ் திரை உலக நடிகை குட்டி பத்மினி.
உலகநாயகன் கமல்ஹாசனை பல நடிகைகள் காதலித்தனர், ஆனால் ஸ்ரீவித்யாவிற்கு நாட்டியம் மற்றும் பாட்டு என இரண்டும் தெரியும் என்பதால் அவருக்கும் ஸ்ரீவித்யாவிற்கு இடையே காதல் மலர அது வாய்ப்பளித்தது. அவர்கள் இருவருடைய காதல் மிகவும் ஆழமானது, தெய்வீகமானது ஆனால் அதற்குப் பிறகு ஏற்பட்ட பல விஷயங்களால் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
கமலும் வானியை திருமணம் செய்து கொண்டார், ஸ்ரீவித்யாவும் தான் காதலித்த ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த சூழ்நிலையில் அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்து பேசினேன். அவரை வைத்து ஏற்கனவே நான் ஒரு சீரியல் எடுத்த நிலையில், இரண்டாவது சீரியல் குறித்து பேசத்தான் அவரை அழைத்தேன்.
ஸ்ரீவித்யாவின் இறுதி நாட்கள்
அப்பொழுது கொச்சிக்குவா என்று என்னை அழைத்தார், நானும் நேரடியாக கொச்சிக்கு சென்றேன். அப்பொழுது தான் அவர் மருத்துவமனையில் கேன்சர் பாதிக்கப்பட்டு அதுவும் தனது இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்தேன். என்னை பார்த்ததும் என்னை கட்டி அணைத்து அழுத ஸ்ரீவித்யா, நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இறந்து விடுவேன், எனக்கு கேன்சர் முற்றிவிட்டது, எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று தன் கையைப் பிடித்து கதை அழுததாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.