Kutty Story Thalapathy Vs Super Star : தளபதி விஜய் அவர்களின் லியோ திரைப்படம் உலக அளவில் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறிவரும் நிலையில், நேற்று நவம்பர் 1ம் தேதி திட்டமிட்டபடி லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
ரஜினி சொல்லும் குட்டிக் கதை
முன்பெல்லாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் தோன்றும் மேடையில் எல்லாம் ஒரு குட்டி கதை ஒன்றை கூறுவார். அது பொதுவாக யாரையும் தனித்து குறிப்பிடாமல், பொதுவான கருத்தாகவே இருந்து வந்தது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ஜெயிலர் திரைப்பட விழாவில் சொன்ன "காக்கா கழுகு" கதை மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. அவர் அந்த பேச்சை பேசி முடித்ததும் நான் "காக்கா கழுகு" என்று யாரையும் ஒப்பிட்டு கூறவில்லை, பொதுவாக கூறினேன் என்று விளக்கமாக கூறியிருந்தாலும், பலர் தளபதி விஜய் அவர்களை தான் ரஜினி காக்கா என்று குறிப்பிட்டதாக கூறி வந்தனர்.
விஜய் சொல்லும் குட்டிக்கதை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாணியில் தனது அனைத்து மேடைகளிலும் குட்டி ஸ்டோரி சொல்லும் வழக்கத்தை தளபதி விஜய் அவர்கள் கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் நேற்று தனது லியோ திரைப்பட வெற்றி விழாவிலும் அவர் ஒரு குட்டி கதையை கூறி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
அதாவது இரு வேடர்கள் வேட்டையாட செல்கின்றனர், அதில் ஒருவர் வெற்றிகரமாக முயலை வேட்டையாடி திரும்புகிறார். ஆனால் யானைக்கு வலை விரித்தவர் தோல்வியடைந்து திரும்புகிறார். ஆனால் உண்மையில் இதில் முயலை வேட்டையாடியவரை காட்டிலும், தன்னுடைய எண்ணத்தை பெரிதாக வைத்து யானைக்கே வலை விரித்த அந்த வேடர் தான் வெற்றி பெற்றவர் என்று கூறி எப்பொழுதும் நம்முடைய பார்வை பெரிதாக இருக்க வேண்டும் என்று விஜய் கூறினார்.
இது திருக்குறளில் வரும் படைச்செருக்கு என்கின்ற அதிகாரத்தில் உள்ள 772 வது குரல் என்பது நாம் அறிந்ததே. அதாவது "கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிதுகா முயலெய்த அன்பினில் யானை பிழைத்தவையில் ஏந்தல் இனிது" என்பதுதான் அந்த குரல். அதாவது காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது என்பது தான்.
Junior Balaiah: கோலிவுட் கொண்டாட தவறிய அசாத்திய கலைஞன்... யார் இந்த ஜூனியர் பாலையா?
தளபதி விஜய் அவர்களும் அதைத்தான் கூறியுள்ளார், முன்பெல்லாம் ரசிகர்கள் அஜித் மற்றும் விஜய் என்ற வாக்குவாதத்தில் இருந்ததை தாண்டி, இப்பொது ரஜினி மற்றும் விஜய் என்ற வாக்குவததற்கு வந்துவிட்டனர் என்றே கூறலாம். ஆனாலும் தளபதி விஜய் அவர்கள், சூப்பர் ஸ்டார் மீது பெரிய அளவில் அன்புகொண்டவர் என்பதை அவ்வப்போது பலர் நிரூபித்து வருகின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D