நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

By Ganesh A  |  First Published Nov 2, 2023, 8:08 AM IST

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகராக வலம் வந்த ஜூனியர் பாலையா, உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.


தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக கலக்கி வந்தவர் ஜூனியர் பாலையா. இவர் தமிழில் வின்னர், கும்கி, சுந்தர காண்டம், சாட்டை என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், இன்று காலை காலமானார். அவருக்கு வயது 70.

ஜூனியர் பாலையாவின் மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னையில் வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ஜூனியர் பாலையாவின் உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளது.

Tap to resize

Latest Videos

click me!