
பைக் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்டவற்றில் மிகுந்த விருப்பம் கொண்ட அஜித். முன்னதாக ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் சவாரி செய்த படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியிருந்தன. படப்பிடிப்பிற்கு இடையே விடுமுறையில் உள்ள அஜய், ஓய்வெடுப்பதற்காக மற்ற நடிகர்களின் பாணியை பின்பற்றாமல் உலகை சுற்ற முடிவெடுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...சூர்யா - சாய் பல்லவி கூட்டணியில் வெளியாகும் ‘கார்கி’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
சமீபத்திய தகவலின் படி அல்டிமேட் ஸ்டார் தற்போது பிரான்சில் உள்ளார். இவரின் சமீபத்திய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் அருகே அவர் உரையாடிய வீடியோக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் செய்த புகைப்படங்கள் தீயாக பரவி வந்தன.
மேலும் செய்திகளுக்கு...அஜித்குமாரின் வலிமை முதல் சூர்யாவின் வணங்கான் வரை.. இந்த வருட "v" வரிசை படங்கள்!
இந்நிலைகள் பாரிஸ் தெருக்களில் அஜித் குமார் நடந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. ஏகே 61 படத்தின் ஸ்டைலில் இருக்கும் அஜித் சகாக்களுடன் தெருக்களில் ஸ்டைலாக நடந்து செல்லும் வீடியோ தான் அது.
அஜித் குமார் தற்போது நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கிய வினோத்துடன் மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ளார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். வங்கி கொள்ளை தொடர்பான கதைகளத்தை கொண்ட இந்த படத்தில் அஜித் எதிர்மறை கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...வெயிலையே ரசிக்க வைத்த கவிஞன்.... நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று
இதற்கென ஹைதராபாத்தில் மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சென்னையில் உள்ள மவுண்ட் ரோடு போன்ற அமைப்பு. இதற்கு பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே செல்வமணி கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சென்னையிலும் சில காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையே சிறிது ஓய்வு காலம் கிடைத்துள்ளதால் உலகை சுற்றி பார்க்க கிளம்பி விட்டார் அல்டிமேட் ஸ்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.