சூர்யா - சாய் பல்லவி கூட்டணியில் வெளியாகும் ‘கார்கி’ படத்தின் சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

By Ganesh A  |  First Published Jul 12, 2022, 2:04 PM IST

sai pallavi Gargi movie : சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள கார்கி திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அதன் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.


நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் இருக்கிறார். சமீபத்தில் இவர்கள் தயாரிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தன.

இந்த நிலையில் சூர்யாவின் 2டி நிறுவனம் அடுத்ததாக கார்கி என்கிற படத்தை வெளியிட உள்ளது. இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரிச்சி பட இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... இப்போ வேற கல்யாணம் ஆகிடுச்சு... விவாகரத்து குறித்து முதன்முறையாக மனம்திறந்த இசைவாணி

கார்கி படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படம் வருகிற ஜூலை 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒருசில தினங்களே இருப்பதனால் இப்படத்தின் புரமோஷன் பணிகளும், இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் தற்போது கார்கி படத்தின் சிங்கிள் டிராக் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இதில் இடம்பெறும் யாத்ரி என்கிற பாடலை இன்று இரவு 7 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 75-வது படத்திற்காக இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனுடன் கூட்டணி அமைத்த நயன்தாரா - அனல்பறக்க வந்த அப்டேட்

click me!