75-வது படத்திற்காக இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனுடன் கூட்டணி அமைத்த நயன்தாரா - அனல்பறக்க வந்த அப்டேட்

By Ganesh A  |  First Published Jul 12, 2022, 11:31 AM IST

Nayanthara : தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர்ஸ்டாராக உயர்ந்த நயன்தாரா, அண்மையில் பாலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகமானார். அங்கு அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

இதையும் படியுங்கள்... விடாது கருப்பாய் துரத்தும் காளி பட போஸ்டர் சர்ச்சை... லீனா மணிமேகலைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த கோர்ட்

Tap to resize

Latest Videos

இதுதவிர ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இறைவன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அஹ்மத் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி..!

இந்நிலையில், நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது. ஹீரோயினை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

Announcing 🥳
Zee Studios is excited to collaborate with for her 75th film! 💃🏻
The shoot will begin soon! 🎬 pic.twitter.com/nVVCnLek83

— Zee Studios (@ZeeStudios_)

இதையும் படியுங்கள்... Vijay : அந்த ஒரு காரணத்துக்காக பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த விஜய்... அதுவும் என்ன கேரக்டர் தெரியுமா?

நயன்தாரா நடிக்க உள்ள 75-வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ஜெய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். மூக்குத்தி அம்மன், மிஸ்டர் லோக்கல், தானா சேர்ந்த கூட்டம், காதலும் கடந்துபோகும் போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 

click me!