இந்திரா காந்தியான கங்கனா ரனாவத்.. ட்ரைலரை பார்த்து தமன்னா என்ன சொன்னார் தெரியுமா?

By Kanmani PFirst Published Jul 15, 2022, 3:27 PM IST
Highlights

எமர்ஜென்சி டீசர் குறித்து பாலிவுட் பிரபலங்கள் அர்ஜுன் ராம்பால், திவ்யா தாத்தா மற்றும் ஏக்கா கபூர் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையை தமன்னா பாட்டியா " பிளடி ப்ரில்லியண்ட் " என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பேசும் பொருளாகி வருகிறார். கங்கனா ரனாவத்.இவர் ஜெயம் ரவி நடித்த  தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலர்களுக்கு அறிமுகமானார். இவர் தேசிய விருது பெற்ற நடிகையாவர். முன்னதாக  ஏ எல் விஜய் இயக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி படத்தில் நடித்திருந்தார்.

இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் இவர் நடித்த படம் வெளியாகியது. ஆனால் இந்த படம் போதுமான வரவேற்பை பெறாமல் பெருத்த ஏமாற்றத்தை தந்திருந்தது. இந்நிலையில் தற்போது "எமர்ஜென்சி" என்ற படத்தை தயாரித்து, இயக்கி நடித்து வருகிறார்கள் இந்த படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடித்து வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...Pratap Pothen Second Wife : மறைந்த பிரதாப் போத்தன் இரண்டாவது மனைவி மற்றும் மகள் பற்றி தெரியுமா?

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.  பிரதமர் இந்திரா காந்தி போன்ற காட்டன் சாரி கண்ணாடி என மிடுக்கான தோற்றத்தில் இருந்தார் கங்கனா. அந்த டீசரில் வெளிநாட்டு தூதர் ஒருவர் தொடர்பு கொண்டது குறித்த இந்திரா காந்தியின் உதவியாளர் தெரிவிக்கிறார். அப்பொழுது பதில் அளித்த நாயகி தன்னை அலுவலகத்தில் அனைவரும் சார் என்று அழைப்பது பற்றி அவர்களிடம் தெரிவிக்குமாறு கூறுகிறார்.  முதல் வசனமே ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் செய்திகளுக்கு..."பார்த்திபனின் இரவின் நிழல்"....படக்குழுவின் கலகலப்பான வேண்டுகோள்!

இந்திய ஜனநாயகத்தின் ஒரு முக்கிய வரலாறாக பார்க்கப்படுவது "எமர்ஜென்சி" எடுத்திருப்பது பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்திய வரலாற்றில் கருப்பு பக்கம் என கூறப்படும் எமர்ஜென்சி குறித்து தான் பேச விரும்பியதாகவும், ஒரு பிரபலம் போல நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் படம் குறித்து பேசுகையில் குறிப்பிட்டிருந்தார் கங்கனா ரனாவத்.

மேலும் செய்திகளுக்கு...பக்கா கிளாமராக மாறிய கீர்த்தி சுரேஷ்!.. சொக்க வைக்கும் போட்டோஸ் இதோ..

இதற்கிடையே எமர்ஜென்சி டீசர் குறித்து பாலிவுட் பிரபலங்கள் அர்ஜுன் ராம்பால், திவ்யா தாத்தா மற்றும் ஏக்கா கபூர் ஆகியோர் பாராட்டு தெரிவித்திருந்த நிலையை தமன்னா பாட்டியா " பிளடி ப்ரில்லியண்ட் " என குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

click me!