
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தன. இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது சிவகார்த்திகேயனின் மார்க்கெட் கோலிவுட்டில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
தற்போது இவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் கைவசம் பிரின்ஸ், அயலான் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்திலும், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் எஸ்.கே.
இதையும் படியுங்கள்... விஜய்யின் சொகுசு கார் வழக்கு பின்னணி என்ன?... உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது ஏன்? - முழு விவரம்
இதில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தலைப்புடன் கூடிய ப்ரோமோ வீடியோவை பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டார். அதன்படி இப்படத்திற்கு மாவீரன் என பெயரிடப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய அந்த ப்ரோமோ வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் ரவுடிகளிடம் அடிவாங்குவது போலவும், பின்னர் அவர்களை அடித்து துவம்சம் செய்வது போலவும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மேலும் அதில் சிவகார்த்திகேயனின் தோற்றம் தளபதி படத்தில் வரும் ரஜினியின் ஸ்டைலில் இருப்பதாகவும் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். ஏற்கனவே ரஜினி நடிப்பில் மாவீரன் என்ற பெயரில் ஒரு படம் கடந்த 1986-ம் ஆண்டு வெளியாகி உள்ளது. தற்போது அதே தலைப்புடன் சிவகார்த்திகேயனும் களமிறங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஒரே ஷாட்டில் எடுத்த படம்... பார்த்திபனின் விடா முயற்சிக்கு விஸ்வரூப வெற்றி கிடைத்ததா? - இரவின் நிழல் விமர்சனம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.