ஜூலை மாதம் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்துக்கு போட்டியாக சூர்யாவின் படமும் ரிலீஸ் ஆக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸில் செம சம்பவம் காத்திருக்கு.
சொதப்பிய தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவிற்கு 2024-ம் ஆண்டு ஒரு சோதனை ஆண்டாகவே அமைந்திருந்தது. ஏனெனில் இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் ரிலீஸான படங்களில் ஒரு படம் கூட பிளாக்பஸ்டர் ஹிட்டாகவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள படம் மாஸ் காட்டியது. அப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.50 கோடி வசூலை வாரிக்குவித்தது. புதுப்படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனதால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து திரையரங்க உரிமையாளர்கள் கல்லாகட்டி வந்தனர்.
மீட்டெடுத்த அரண்மனை 4
இப்படி ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை கடந்த மாதம் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் தான் மீட்டெடுத்தது. இந்த ஆண்டில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை நிகழ்த்திய முதல் தமிழ் படம் அதுதான். அரண்மனை 4 படத்தின் வெற்றிக்கு பின்னர் சூரி நாயகனாக நடித்த கருடன் படம் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இதையும் படியுங்கள்... Dhanush: நண்பரின் பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து கூறிய தனுஷ்! வைரலாகும் போட்டோ!
எதிர்பார்ப்பில் இந்தியன் 2
இப்படி கோலிவுட் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், அடுத்த மாதம் இரண்டு தரமான படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதில் ஒன்று இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இப்படம் வருகிற ஜூலை 12-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் நாடு முழுவதும் இப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கமல் சூர்யா மோதல்
ஆனால் அதே நாளில் சூர்யா தயாரித்துள்ள முதல் இந்தி படமான சர்பிராவும் ரிலீஸ் ஆக உள்ளதால், வட மாநிலங்களில் இந்தியன் 2 படத்தின் வசூல் வேட்டைக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சர்பிரா படத்தை தயாரித்துள்ளதோடு அதில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார் சூர்யா. இது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற சூரரைப்போற்று படத்தின் இந்தி ரீமேக் ஆகும். சுதா கொங்கரா தான் சர்பிரா படத்தையும் இயக்கி உள்ளார். இதில் நாயகனாக அக்ஷய் குமார் நடித்திருக்கிறார்.
தனுஷுக்கு பிறந்தநாள் பரிசு கிடைக்குமா?
ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் ராயன். தனுஷ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படம் அவரின் பிறந்தநாளையொட்டி ஜூலை 26-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தனுஷின் 50-வது படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா மாஸ் ஹிட் அடித்ததை போல் தனுஷுக்கும் அவரது 50வது பட வெற்றி பிறந்தநாள் பரிசாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மாஸ் ஹிட் அடித்த மகாராஜா படத்திற்காக மிகவும் கம்மி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி - அதுவும் இவ்வளவு தானா?