
பாலிவுட் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து அசத்தி வருபவர் அமிதாப் பச்சன். இவர் இன்று தனது 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக சோசியல் மீடியா வாயிலாக ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த், டுவிட்டர் வாயிலாக அமிதாப் பச்சனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : ”தி லெஜண்ட்.. என்னை எப்போது ஊக்கப்படுத்திய ஒருவர்... உண்மையான உணர்வுப்பூர்வமான நடிகர், நம் பெருமைமிக்க இந்திய சினிமாவின் சூப்பர்ஹீரோ 80க்குள் நுழைகிறார். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனது அன்புள்ள மற்றும் மரியாதைக்குரிய அமிதாப் ஜி. நிறைய அன்போடு உங்களுக்கு எல்லாமே சிறந்ததாகவே அமையட்டும்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 4 மாதத்தில் குழந்தை... இதே மாதிரி அஜித் படத்தையும் பாஸ்ட்டா ரிலீஸ் பண்ணிடுங்க விக்கி - அஜித் ரசிகர் கோரிக்கை
அதேபோல் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, அமிதாப் பச்சனுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு, உங்களது ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும் அமிதாப் அங்கிள். நீங்க தான் லெஜண்ட் என பதிவிட்டுள்ளார். இதுதவிர ஏராளமான திரையுலக பிரபலங்களும் அமிதாப் பச்சனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Rahul Koli Death: அதிர்ச்சி... 10 வயது குழந்தை நட்சத்திரம் புற்றுநோயால் அதிர்ச்சி மரணம்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.