வாடகை தாய் மூலம் குழந்தை... நயன்தாராவிடம் விசாரிக்கப்படுமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

By Ganesh AFirst Published Oct 11, 2022, 12:39 PM IST
Highlights

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரத்தில் நயன்தாராவிடம் விசாரணை நடத்த வேண்டுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் . இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இவர், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்டார். மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அதில் திரைப்பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையடுத்து தாய்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு ஹனிமூன் சென்று கொண்டாடிய இந்த ஜோடி தற்போது சினிமாவில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே அக்டோபர் 9-ந் தேதி பிஞ்சு குழந்தைகளின் கால்களை பிடித்து முத்தமிட்டவாரு இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்தார் .

இதையும் படியுங்கள்... வசூலில் கடும் சரிவை சந்தித்த பொன்னியின் செல்வன்... விக்ரம் திரைப்படத்தின் சாதனையை முறியடிக்குமா?

இதைபார்த்த உடனே பலரும் கேட்ட கேள்வி எப்படி நான்கே மாதத்தில் குழந்தை பிறந்தது என்பது தான். அதற்கெல்லாம் விடை அவர்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இது மேலும் சர்ச்சையை கிளப்பியது. ஏனெனில் இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எப்படி அந்த முறையில் குழந்தை பெற்றெடுத்தார்கள் என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்தன.

இவ்வாறு நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்  நயன்தாராவிடம் விசாரணை நடத்த வேண்டுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தான் முடிவெடுப்பார்கள் என கூறினார். 

இதையும் படியுங்கள்... பிகினி உடையில் கவர்ச்சி அலப்பறை... மாலத்தீவில் மஜா பண்ணும் ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

click me!