சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படப்பிடிப்புக்காக கொச்சி செல்வதற்காக விமானநிலையம் சென்ற போது, எடுக்கப்பட்ட வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தை நயன்தாராவை வைத்து 'கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' மற்றும் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.
மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை, நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக நடந்து வந்த நிலையில், ஒரு சிறு பிரேக்குக்கு பின்னர் மீண்டும் துவங்க உள்ளது. மேலும் இதற்கு இடையில், ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Breaking: நடிகை யாஷிகாவுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!
undefined
'ஜெயிலர்' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக தற்போது படக்குழுவினர், சென்னையில் இருந்து விமான மூலம் கொச்சிக்கு சென்ற போது, விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இன்னும் 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த மாதம் இப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கணவருக்காக மதம் மாறினாரா 'குக் வித் கோமாளி' மணிமேகலை.. 'லவ் ஜிகாத்' உண்மை என்ன?
Superstar reached Cochin for shoot.
pic.twitter.com/79rlA20NZh