நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த 2021 ஆம் ஆண்டு, தன்னுடைய ஆண் நண்பர்கள் இருவர் மற்றும் பெண் தோழி ஒருவருடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு, சென்னை திரும்பிய போது... செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த, சூளேரிக்காடு என்கிற பகுதியில் கார் அதிவேகமாக வந்த போது, யாஷிகா வந்த கார் நிலை தடுமாறி சாலை சென்டர் மீடியனில் மோதி பள்ளத்தில் கவர்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் யாஷிகா மற்றும் அவருடன் இருந்த அமெரிக்காவை சேர்ந்த இரண்டு ஆண் நண்பர்கள் பலத்த காயமடைந்த நிலையில், யாஷிகாவின் பெண் தோழி வள்ளிச்செட்டி பவானி மட்டும் துரதிஷ்ட வசமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுயநினைவை இழந்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த யாஷிகா மற்றும் அவரின் நண்பர்களை அக்கம் பக்கம் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு, சென்னை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு பின்னர் சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது அந்த விபத்தின் தாக்கத்தில் இருந்து யாஷிகா மீண்டு, மீண்டும் படப்பிடிப்புகளை கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த கார் விபத்து தொடர்பான வழக்கு விசாரணைக்காக மார்ச் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என கூறப்பட்டிருந்த நிலையில், யாஷிகா ஆஜராகாத நிலையில் தற்போது அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் கோலிவுட் திரை உலகை மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.