கடந்த மாதம் திரையரங்கில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'பகாசுரன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கதைகளை கூட, சாமர்த்தியமாக இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் மோகன் ஜி. 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தின் மூலம் இயக்குனராக கோலிவுட் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர்... திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்கிய திரைப்படம் தான், 'பகாசுரன்'.
இந்த படத்தின் மூலம் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார், பிரபல இயக்குனர் செல்வராகவன். இவர் ஏற்கனவே 'பீஸ்ட்', 'சாணி காகிதம்', 'நானே வருவேன்' போன்ற படங்களில் நடித்திருந்தாலும்... முன்னணி கதாபாத்திரத்தில் இவர் நடித்த முதல் படம் இது தான். இப்படம் கடந்த மாதம், (பிப்ரவரி 17 -ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியான நிலையில், ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில்... பாசிட்டிவான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் மத்தியில் கலவையான விமர்சனங்களையும் பெற்றது.
இதற்க்கு காரணம், இப்படத்தின் கதை பெண்கள் என்றால் ஆண்களுக்கு பயந்து நடுங்குவார்கள்... தற்கொலை செய்து கொள்வார்கள் என பிற்போக்கு தனமாக உள்ளதாக ஒரு பக்கம் விமர்சனங்கள் எழுந்தாலும், மற்றொரு புறம் படமாக பார்க்க மிகவும் முக்கியமான கருத்தை வெளிப்படுத்திய படம் என்றே கூறலாம். குறிப்பாக இப்படத்தில், செல்வராகவன் - நட்டி ஆகியோர் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.
இப்படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், தற்போது இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்... வெளியாகியுள்ளது. க்ரைம்-த்ரில்லர் திரைப்படமான 'பகாசுரன்' அமேசான் பிரைம் ஓடிடி தலத்தில் மார்ச் 24, 2023, அதாவது நாளை வெளியாக உள்ளது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்கிற கருத்தையும், இல்லையென்றால் எப்படி பட்ட விளைவுகள் ஏற்படுகிறது என்பது பற்றி தோலுரித்து காட்டியது இப்படம்.