தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் நின்று போஸ் கொடுத்த அவன் - இவன் பட நடிகர்..!

Published : Mar 22, 2023, 11:11 PM ISTUpdated : Mar 23, 2023, 08:23 AM IST
தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் நின்று போஸ் கொடுத்த அவன் - இவன் பட நடிகர்..!

சுருக்கம்

அவன் இவன் படத்தில் நடத்து புகழ்பெற்ற நடிகர் குமார் தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் நின்று போஸ் கொடுத்து நெட்டிசன்களுக்கு சிரிப்பு மூட்டியிருக்கிறார்.

பிரபல இயக்குநரும் நடிகருமான ஜி. எம். குமார் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி இருக்கிறார்.

பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தவர் ஜி.எம்.குமார். குமார் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் தனது கண்ணீர் அஞ்சலி பேனருடன் போஸ் கொடுத்தபடி ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் "ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை" என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜி.எம். குமாரின் இந்த படம் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களிடமிருந்து நகைச்சுவையான கருத்துகளைப் பெற்று வருகிறது.

இதைத்தான் நீங்களும் சாப்பிடுறீங்களா? ஜாக்கிரதையா இருங்க! எச்சரிக்கும் ரசயான கலப்பட வீடியோ

பாரதிராஜா இயக்கிய 'கேப்டன் மகள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஜி.எம்.குமார். அதையடுத்து ‘தொட்டி ஜெயா’, ‘வெயில்’, ‘மலைக்கோட்டை’, ‘குருவி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும், பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தின் நடிப்புதான் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஜி. எம். குமார் அந்தப் படத்தில் ஹைனஸ் என்ற பெயரில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து தன் திறமையைக் காட்டி இருந்தார். அதுவும் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்து ரசிகர்களைத் திகைக்க வைத்தார்.

இவர் 'அறுவடை நாள்', 'பிக் பாக்கெட்', 'இரும்புப் பூக்கள்', 'உருவம்' போன்ற படங்களை ஜி.எம்.குமார் இயக்கியுள்ளார். கடைசியாக மார்ச் 2023 இல் வெளியான 'பல்லு படமா பாத்துக்க' படத்தில் நடத்தார். அதில் அவர் பார்வையற்ற பணக்காரராக நடித்திருந்தார். இன்னும் வெளிவரவிருக்கும் பல படங்களில் குமார் நடித்திருக்கிறார். அந்தப் படங்களின் மூலம் மீண்டும் படவுலகில் முத்திரை பதிக்க முடியும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

அவன் இவன் படத்துக்குப் பின் அவர் பல படங்களில் நடத்திருத்தாலும் அந்தப் படம்தான் அவரை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள காரணமாக இருக்கிறது. அடுத்து வரும் படங்களில் அதை மிஞ்சும் வகையில் அபார நடிப்பை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு! ரயில்வே கூலித் தொழிலாளரின் செயலுக்கு குவியும் பாராட்டு

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!