அவதூறு வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமினில் விடுவிப்பு... நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

By Ganesh A  |  First Published Jul 20, 2023, 10:27 AM IST

கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் அவதூறாக வீடியோ வெளியிட்ட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.


திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன், கடந்த சில நாட்களுக்கு முன் அவரது ட்விட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார். அதில் கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடையுடன் வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர், இளம் பெண்ணுடன்  நடனமாடும் வீடியோ, அதன் பின்னணியில் தமிழ் திரைப்பட பாடலும் இணைக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அதில் வெளிநாட்டு மத கலாச்சாரம் இது தான் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக., ஐ.டி., பிரிவை சேர்ந்த ஆஸ்டின் பெனட் (54) என்பவர் நாகர்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார் அதில் கிறிஸ்தவ மதத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் அவதூறாக வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிட்டும் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Latest Videos

இதையும் படியுங்கள்... சூர்யாவுக்கு வில்லன் இவர்தானா?... கங்குவா படக்குழு பொத்தி பொத்தி பாதுகாத்து வச்சிருந்த விஷயம் லீக் ஆகிடுச்சே!

இந்நிலையில் தனக்கு ஜாமின் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் அதன் அடிப்படையில்  ஜாமீன் மனு மீது விசாரணை  நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின் அடிப்படையில் சினிமா  ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு 30 நாள் தினமும் நாகர்கோவில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிராம் அலுவலகத்தில் கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனை பேரில் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது pic.twitter.com/Rbeg8yIOi9

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இதையும் படியுங்கள்... மரண தண்டனை கொடுக்கனும்... மணிப்பூர் சம்பவம் குறித்து கொந்தளித்த குஷ்பூ மற்றும் அக்‌ஷய் குமார்

click me!