விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா??- இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எதிர்பாராத பதில்! வீடியோ

Published : Jul 19, 2023, 10:21 PM IST
விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா??- இயக்குநர் லோகேஷ் கனகராஜின் எதிர்பாராத பதில்! வீடியோ

சுருக்கம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், சரவணம்பட்டி பகுதியில் உள்ள SNS தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.  

கோவையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சரவணம்பட்டி பகுதியில் உள்ள SNS தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தின் படப்பிடிப்பு இப்போது தான் முடிந்துள்ளது எனவும், மீதமுள்ள  வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும், நடிகர் கார்த்தி கூறியது போன்று சமூகம் சார்ந்த பணிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்றார். 

மேலும்  'இரும்பு கை மாயாவி' படம் தற்போதைக்கு எடுக்க முடியாது எனவும், அதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறேன் எனவும் தெரிவித்தார். எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் கிடையாது எனவும், பத்து படம் முடித்துக் கொண்டு என் சினிமா பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்றார். மேலும் அண்மையில் நண்பர் விளம்பரம் செய்வதற்காக ஒரு யூனிட் செட்டப் தேவைப்பட்ட போது கோவையில் கிடைக்கவில்லை எனவும் அதனை பாலக்காட்டில் இருந்து கொண்டு வர வேண்டிய நிலை இருக்கிறது என்றார். வருங்காலத்தில் கோவையில் படம் பண்ணுவதற்கான நிலை வரவேண்டும் எனவும் அதற்கான முதல் கால் நான் எடுத்து வைக்க தயாராக இருக்கிறேன் எனவும் கூறினார்.  

மகளுடன் ஒரு நாள்... அம்மாவுடன் மறுநாள்..! அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி புரட்டி எடுத்த முரட்டு நடிகர்!

சினிமாவிற்க்குள் வருவதற்கு முன் வங்கியில் நான்கு வருடம் வேலை செய்தேன், நமக்கு என்ன பிடிக்குதோ அதை செய்ய வேண்டும் என்றார். அதன்படி தான் சினிமாவிற்கு வந்துள்ளேன் எனவும் கூறினார். லியோவில் அரசியல் தொடர்பான காட்சிகளும் வசனங்களும் இல்லை என கூறினார். விஜய் அரசியலுக்கு தகுந்த நபரா? என நீங்கள் நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு,  அரசியலை பற்றி தெரிந்தவர்கள் பேசலாம். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை . அரை குறைவான அறிவு ஆபத்தானது என்ற பழமொழி உண்டு, ஆக எனக்கு அதைப் பற்றி எனக்கு தெரியாது என பதிலளித்தார். விஜயை நான் அண்ணன் என்று கூப்பிடுவதற்கு அவர் நல்ல மனிதர் அவரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். விஜயுடன் மூன்றாவது படம் இணைய காத்திருக்கிறேன். கண்ணிமைத்தால் படம் செய்வேன் என்றார். 

டிடி ரிட்டர்ன்ஸ் செய்தியாளர் சந்திப்பில்... லோகேஷ் கனகராஜை மறைமுகமாக போட்டு தாக்கிய சந்தானம்?

சமூக நீதிச் சார்ந்த படங்கள் இயக்க எனக்கு போதிய அறிவில்லை என நினைக்கிறேன்.  சினிமாவில் 150 ரூபாய் கொடுக்கும் ரசிகரின் மரியாதை மிகப் பெரியது. நான் எடுப்பது கமர்சியல் சினிமாதான் வேற பெரிய படங்கள் எடுப்பதில்லை. ஆயிரம் கோடி வசூல் இட்டுமா என்பது கருத்தை தாண்டி எனக்கு ரசிகர் கொடுக்கக்கூடிய ஒரு 150 ரூபாய் முக்கியம். லியோவை தொடர்ந்து அடுத்து ஒரு படம் செய்கிறேன். அதை தொடர்ந்து பிறகு கைதி 2 நடக்கும். வருமான வரி துறையில் இருந்து எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள். அப்போது நான் கூறிய வார்த்தை வருமான வரி கட்டும் பணம் யாருக்கு பயன்படுகிறது என்று தெரிய வந்தால் கொடுப்பது எனக்கும் மகிழ்ச்சி ஒரு வெளிப்படை வேண்டுமென தான் குறிப்பிட்டிருந்தேன். சமூக வலைதளங்களில் வெளியாகும் படத்தை ஒன்னும் செய்ய முடியாது. எதிர்பார்ப்பின் காரணமாகத்தான் சமூக வலைதளங்களில் படத்தை பகிர்கிறார்கள். ஆனால் அதற்கு பின்பு ஏரளமான மக்களின் உழைப்பு இருக்கிறது. அது தெரிந்தால் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.  லியோ அப்டேட் குறித்த கேள்விக்கு செப்டம்பர் ஆடியோ லான்ச் ரிலீஸ் ஆகும். கோவைக்கு  விஜயை அழைத்து வர முயற்சிக்கிறேன் என்றார் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?