‘பிச்சைக்காரன் 2’ திருட்டுக் கதையா?... விஜய் ஆண்டனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Published : Apr 07, 2023, 10:53 AM IST
‘பிச்சைக்காரன் 2’ திருட்டுக் கதையா?... விஜய் ஆண்டனிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சுருக்கம்

விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து, இயக்கி இருக்கும் பிச்சைக்காரன் 2 படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் அப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, சினிமாவில் நடிக்கத்தொடங்கிய பின் முழு நேர நடிகராகிவிட்டார். நான், பிச்சைக்காரன், கொலைகாரன், சலீம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகண்ட விஜய் ஆண்டனி, தற்போது பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார்.

பிச்சைக்காரன் முதல் பாகத்தை சசி இயக்கிய நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி உள்ளதோடு, அப்படத்தை தயாரித்தும் உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் மலேசியாவில் பாடல் காட்சி ஒன்றை படமாக்க முடிவெடுத்து அங்கு சென்று அதற்கான படப்பிடிப்பு நடத்தியபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார் விஜய் ஆண்டனி.

இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு கட்ட அறுவை சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். இதன்பின்னர் பிச்சைக்காரன் 2 படத்தை ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்து அதற்கான வேலைகளிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே அவர் நடித்த மற்றொரு படமான தமிழரசன் ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் பிச்சைக்காரன் 2 படத்தின் ரிலீசை மே மாதத்திற்கு தள்ளிவைத்தார் விஜய் ஆண்டனி.

இதையும் படியுங்கள்... அஜித்தால் எந்த பிரச்சனையும் இல்ல... எல்லாம் அவர்களால் தான்! ஏகே 62 வாய்ப்பு பறிபோனது குறித்து விக்கி ஓபன் டாக்

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது. தனது அனுமதியின்றி ஆய்வுக்கூடம் படத்தின் கதையை மையமாக வைத்துதான் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்துள்ளதாக மாங்காடு மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ கணபதி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். 

இதற்காக விஜய் ஆண்டனி தனக்கு ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து விஜய் ஆண்டனி ஏப்ரல் 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதனால் பிச்சைக்காரன் 2 படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... போட்டோகிராபர்களின் செயலால் டென்ஷன் ஆன சமந்தா... போஸ் கொடுக்காமல் கிளம்பிச்சென்ற சாகுந்தலம் நாயகி

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரோகிணிக்கு அதிர்ச்சி கொடுத்த போலீஸ்... கடனில் தத்தளிக்கும் மனோஜ் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
எதிர்நீச்சலில் போகப்போகும் அந்த பெரிய உசுரு யார்? யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் லோடிங்