மீண்டும் நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்ய ரெடியான ஜெய்... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ராஜா ராணி படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர் ஜெய், தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.


தமிழ் திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரின் கெரியரில் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ராஜா ராணி. அட்லீ இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் ரெஜினா என்கிற கேரக்டரில் நயன்தாரா நடித்திருந்தார். அவரின் காதலனாக ஜெய் நடித்திருந்தார். இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. 

ராஜா ராணிக்கு பின்னர் ஜெய்யும், நயன்தாராவும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், அந்த ஜோடி 10 ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் இணைந்துள்ளது. அதன்படி நயன்தாராவின் 75வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகர் ஜெய் கமிட் ஆகி உள்ளார். நடிகர் ஜெய்யின் பிறந்தநாளான இன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்...  அனுமன் ஜெயந்திக்காக ‘ஆதி புருஷ்’ படக்குழு வெளியிட்ட ஸ்பெஷல் போஸ்டர் - பிரபாஸ் வேறலெவல்ல இருக்காரே..!

‘Sandhoshathula kannu verkudhu’ as we welcome our boy next door on board to our family. Wishing a very happy birthday to . pic.twitter.com/mIk9sQnemr

— Trident Arts (@tridentartsoffl)

நயன்தாராவின் 75-வது படத்திற்கு லேடி சூப்பர்ஸ்டார் 75 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்...  கார் ரேஸிற்கு அஜித் எண்ட் கார்டு போட்டதுக்கு காரணம் இதுதானாம்... கொளுத்திப்போட்ட பயில்வான் ரங்கநாதன்

click me!