"ஆதாரமில்லாமல் கண்டபடி பேசக்கூடாது".. உச்சகட்ட கோபத்தில் நடிகை வரலக்ஷ்மி - என்ன ஆச்சு? ஏன் இந்த கோபம்!

Ansgar R |  
Published : Mar 14, 2024, 09:21 PM IST
"ஆதாரமில்லாமல் கண்டபடி பேசக்கூடாது".. உச்சகட்ட கோபத்தில் நடிகை வரலக்ஷ்மி - என்ன ஆச்சு? ஏன் இந்த கோபம்!

சுருக்கம்

Actress Varalaxmi Sarathkumar : கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கு திரைப்படங்களில் நடிப்பதில் பெரிய அளவில் மும்முரம் காட்டி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார், ஹைதராபாதிலேயே செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச் சிறந்த நடிகராக திகழ்ந்துவரும் சரத்குமார் அவர்களின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கலை உலகில் பயணிக்க ஆரம்பித்த, வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ச்சியாக கன்னடம், மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 

தற்பொழுது தனுஷின் "ராயன்" திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவருக்கும் நிக்கோலை என்பவருக்கும் திருமணம் நடக்க உள்ள இந்த சூழ்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் கொதிப்போடு ஒரு தகவலை அவர் பகிர்ந்துள்ளார் என்றே கூறலாம்.

அடுத்த அட்லியாக மாறிவிட்டாரா ஆதிக்? அஜித் படத்துக்காக ஹாலிவுட் பட டைட்டிலே அபேஸ் பண்ணிருக்காரேப்பா..!

அதில் "மீடியா நண்பர்களுக்கு வேறு செய்தி எதுவும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன், அதனால் தான் ஆதாரமே இல்லாமல் என்னை குறித்த ஒரு பழைய மற்றும் போலியான செய்தியை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். மக்களை மகிழ்விப்பது மட்டுமே எங்களுடைய வேலை, அதை மட்டும் தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்". 

"அதுபோல மக்களுக்கு தேவையான செய்திகளை மட்டுமே கொடுப்பது ஊடகங்களின் கடமை. அதை மட்டும் அவர்கள் ஏன் பார்க்க கூடாது?, நாட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கும் பொழுது என்னைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது ஏன்?. நான் அமைதியாக இருப்பதினால் நான் சோர்வடைந்து இருக்கிறேன் என்பது அர்த்தம் அல்ல". 

"அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதும் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருப்பதை யாரும் மறந்து விட வேண்டாம். ஆதாரமற்ற, அடிப்படையில்லாத என்னைப் பற்றிய போலியான தகவல்களை இனி யாரும் பரப்ப வேண்டாம். நாம் அனைவரும் பெருமைகொள்ளும் அந்த ஊடக தர்மத்தை மீட்டு வாருங்கள்" என்று கூறியிருக்கிறார். 

இந்த திடீர் பதிவிற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது, தமிழகத்தில் இப்பொழுது போதை பொருள் சம்பந்தமான விஷயங்கள் மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் வரலட்சுமி சரத்குமாரிடம் உதவியாளராக இருந்து வந்த ஆதி லிங்கம் என்பவர் போதைப்பொருள் வழக்கில் கடந்த வருடம் கைதானார். 

அது தொடர்பாக NIA வரலட்சுமியிடமும் விசாரணை நடத்தியதாக போலியான செய்திகள் அப்பொழுது பரவியது. அதே போலியான செய்திகள் தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வருகின்றது. மேலும் இந்த வழக்கில் வரலட்சுமி கைதாகி விட்டதாகவும் அவரை விடுவிக்கவே பாஜகவில் அவரது தந்தை சரத்குமார் இணைந்ததாகவும் போலியான தகவல்கள் பரவி வருகின்றது.

Nita Ambani: முகலாயப் பேரரசர் ஷாஜகானின் ஆபரணத்தை அணிந்து வந்த நீதா அம்பானி! விலையை கேட்டா தலையே சுத்தும்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?