
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ஜிவி பிரகாஷின் "திரிஷா இல்லனா நயன்தாரா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் தமிழ் சினிமாவில் களமிறங்கியவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். அதனைத் தொடர்ந்து சிம்புவின் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து வெளியான "பகீரா" என்கின்ற திரைப்படமும் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுக்காத நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "மார்க் ஆண்டனி" என்கின்ற திரைப்படம் ரவிச்சந்திரனுக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொடுத்தது. இந்த சூழலில் அவர் தனது கனவு நாயகனான அஜித்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
அந்த திரைப்படம் தல அஜித்தின் 63வது திரைப்படமாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது 62வது திரைப்படமான "விடாமுயற்சி" திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார் நடிகர் அஜித்குமார். சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக அப்பிட பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், விரைவில் அதற்கான பணிகள் முடிக்கப்பட்டு இவ்வாண்டு இறுதிக்குள் அந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் அஜித் ரசிகர்களுக்கு மேலும் ஒரு உற்சாக செய்தியாக அவருடைய 63வது திரைப்படம் குறித்த அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. Good Bad Ugly என்கின்ற தலைப்புடன் அஜித் குமார் திரைப்படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவிருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பாக எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் கடந்த 1966 ஆம் ஆண்டு, ஹாலிவுட் உலகில் புகழ்பெற்ற நடிகாரண கிளின்ட் ஈஸ்ட்வுட் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தின் தலைப்பைதான் ஆதிக் இந்த திரைப்படத்திற்கு சூட்டியிருப்பதாக கூறப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தின் டைட்டில் "The Good The Bad And The Ugly" என்பதாகும். இது இணையத்தில் இப்பொது பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.