பேக்கிரியில் வேலை செய்த மாறா..! 'சூரரை போற்று' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! வீடியோ

Published : Feb 20, 2021, 02:13 PM IST
பேக்கிரியில் வேலை செய்த மாறா..! 'சூரரை போற்று' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி! வீடியோ

சுருக்கம்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு  ஓடிடி தளத்தில் வெளியாகி, இதுவரை அமேசான் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. 

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா தயாரித்து, நடித்திருந்த திரைப்படம் 'சூரரைப்போற்று'. தீபாவளியை முன்னிட்டு  ஓடிடி தளத்தில் வெளியாகி, இதுவரை அமேசான் இணையதளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையை படைத்தது. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மனதில் கவர்ந்தார் சூர்யா. இவரது நடிப்பிற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தையும் தெரிவித்து வந்தனர்.

மேலும் செய்திகள்: #Breaking ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு! ஆதரவு கேட்டாரா?
 

ஓடிடி தளத்தில் வெளியாகாமல், திரையரங்கில் ஒருவேளை 'சூரரை போற்று' திரைப்படம் வெளியாகி இருந்தால், உலக அளவில் வசூலிலும் சாதனை படைத்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தார் இந்த படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி.

மேலும் ஜி.வி.பிரகாஷின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் வேற லெவல் ஹிட் அடித்து, பலரது காலர் டியூனாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக எடுக்கப்பட்டு, இடம்பெறாமல் டெலீட் செய்யப்பட்ட காட்சியை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். இதிலும் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு சூர்யா நடித்துள்ளது தெரிகிறது.

மேலும் செய்திகள்: நான் 10 வருஷமா லாக் டவுனில் இருக்கிறேன்... கலங்கி அழுத வைகைப்புயல் வடிவேலு..!
 

தன்னுடைய இலட்சியத்தை அடைய விரும்பிய மாறா... அனைத்தையும் இழந்து, மனைவி நடத்தி வரும் பொம்மி பேக்கிரியில் வேலை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கனவு நிறைவேறாத நிலையில், விரதியுடன் இருக்கும் சூர்யா, முகத்தில் ஆத்திரம் போங்க ஏர் இழுக்கும் காட்சிகளும் உள்ளது. அந்த வீடியோ இதோ.... 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கட்டுக்கடங்காத கூட்டம்... சில்மிஷம் செய்த ரசிகர்கள் - கடவுளே என கதறிய நிதி அகர்வால் - வீடியோ இதோ
மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்.. கேள்வி கேட்பான்.. ஈரோட்டில் கர்ஜித்த விஜய்