இறுதி சடங்கிற்கு வாங்க... கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரசிகர்..! நடிகரின் பகீர் பதிவு..!

Published : Feb 20, 2021, 11:12 AM IST
இறுதி சடங்கிற்கு வாங்க... கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரசிகர்..! நடிகரின் பகீர் பதிவு..!

சுருக்கம்

 உயிரோடு இருக்கும்போது பார்க்க முடியாதவர்களை தங்களுடைய இறுதி சடங்கிற்கு வர வைக்க வேண்டும் என்கிற நோக்கில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு தன்னுடைய இறுதிச் சடங்கிற்கு வர வேண்டும் என பிரபல நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து விட்டு இறந்துள்ளார்.  

திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதேபோல் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆதங்கத்திற்கும் குறைவில்லை. உயிரோடு இருக்கும்போது பார்க்க முடியாதவர்களை தங்களுடைய இறுதி சடங்கிற்கு வர வைக்க வேண்டும் என்கிற நோக்கில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு தன்னுடைய இறுதிச் சடங்கிற்கு வர வேண்டும் என பிரபல நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்து விட்டு இறந்துள்ளார்.

மேலும் செய்திகள்: நான் 10 வருஷமா லாக் டவுனில் இருக்கிறேன்... கலங்கி அழுத வைகைப்புயல் வடிவேலு..!
 

கர்நாடக மாநிலத்தில் உள்ள, மாண்டியா என்ற பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளைஞர் ராமகிருஷ்ணன். இவர் சமீபத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தில், தன்னுடைய இறுதி சடங்கிற்கு பிரபல நடிகர் யாஷ் மற்றும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் வரவேண்டும் என்றும், நான் அவர்களின் தீவிர ரசிகன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் செய்திகள்:அஜித் வாடகை காரில் வந்தது ஏன்? 'தல'க்கு எப்போதுமே தில்லு கொஞ்சம் அதிகம் தான்!
 

இதை அறிந்து முன்னாள் முதல்வர் சித்தராமையா அந்த இளைஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு இரங்கலை தெரிவித்தார். ஆனால் நடிகர் யாஷ் இந்த இளைஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை.  மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ரசிகர்களின் கைதட்டல் மற்றும் விசில் சத்தங்கள் தான் எங்களை ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதும் இதுதான். 25 வயதில் அப்படி என்ன உங்களுக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது என்று தற்கொலை முடிவை எடுத்தீர்கள். என தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பகீர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!