அம்மாவாக போறாங்களாம் எரும சாணி ஹரிஜா..! வளைகாப்பு புகைப்படத்துடன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

By manimegalai aFirst Published Feb 19, 2021, 7:09 PM IST
Highlights

எருமை சாணி யூடியூப் ஊடகத்தின் மூலம் பிரபலமானவர் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு கடந்த கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
ஹரிஜா யூடியூப் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அதையும்  தாண்டி சில படங்களிலும் நடித்து பிரபலமானவர். குறிப்பாக சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' அறிமுக இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கி வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் அமர் என்பவருக்கும்  ஹரிஜாவுக்கும் திருமணம் நடந்த நிலையில் தற்போது இவர் விரைவில் குழந்தைக்கு அம்மாவாக போகும் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது கர்ப்பமாக இருக்கும் இவருக்கு மிக பிரமாண்டமாக வளைகாப்பு நடந்துள்ளது. கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் ஹரிஜா. இவருக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

A post shared by Harija (@harijaofficial)

click me!