இனியா - சோனியா அகர்வால் நடப்பில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது

Published : Jul 01, 2024, 09:42 PM IST
இனியா - சோனியா அகர்வால் நடப்பில் சமூகத்தின் ஏற்றத்தாழ்வை உரக்கப்பேசும்  சீரன் திரைப்படம்  விரைவில் வெளியாகிறது

சுருக்கம்

இனியா - சோனியா அகர்வால் நடிப்பில் ஜேம்ஸ் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் சீரன் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

ஜேம்ஸ் கார்த்திக், M.நியாஸ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் துரை K முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளை உரக்கப்பேசும் ஒரு அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. 

தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,  இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக். மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் துரை K முருகன் இப்படத்தை  இயக்கியுள்ளார். 

நீங்க யார் அதை சொல்ல? நான் பீரியட்ஸ் டைம்லையும் கோவிலுக்கு போவேன்.! பாண்டியன் ஸ்டோர் நடிகை அதிரடி பேச்சு!

 நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன் தந்தையின் உரிமைக்காக போராடுவது தான் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான அம்சங்களுடன், அருமையான கருத்தை பேசும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. 

Sunaina Lover: யூடியூப் பிரபலத்திற்கு 2-ஆவது மனைவியாகும் சுனைனா? இவர் தான் காதலரான.. தீயார் பரவும் புகைப்படம்!

ஜேம்ஸ் கார்த்திக்  நாயகனாக நடிக்க,  இனியா , சோனியா அகர்வால்  , ஆடுகளம் நரேன் , ஆஜித் (சூப்பர் சிங்கர்) , க்ரிஷா குரூப் , சென்ட்ராயன் , ஆர்யன் , அருந்ததி நாயர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தின் படப்பிடிப்பு வேலூர், காஞ்சிபுரம், செய்யாரு கிராமப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படக்குழுவினர் படத்தின் விரைவில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றனர். விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்