கேட்டவுடன் பணம் குடுத்து உதவியவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல் ராவ்

Published : Jul 01, 2024, 08:13 PM ISTUpdated : Jul 01, 2024, 08:33 PM IST
கேட்டவுடன் பணம் குடுத்து உதவியவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த நடிகர் வெங்கல் ராவ்

சுருக்கம்

வெங்கல் ராவ் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில், தனது மருத்துவச் செலவுக்காக பணம் கொடுத்து உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு, பாலா உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டு எல்லாருக்கும் வணக்கமும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் அவதிப்படும் காமெடி நடிகர் வெங்கல் ராவ், தனது கோரிக்கைக் கேட்டவுடன் பணம் கொடுத்து உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் வெங்கல் ராவ் சில நாட்களுக்கு முன் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது கை, கால்கள் செயலிழந்துவிட்டதாகவும் வீட்டிலேயே முடங்கி கிடப்பதாகவும் கூறியிருந்தார். இதனால், அடுத்து வேளை சாப்பாட்டுக்கே வழி தெரியாமல் உள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவியைச் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை; டெல்லி ஆளுநர் தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு!

வெங்கல் ராவ் வீடியோ வெளியான உடனேயே அவருக்கு நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் கொடுத்து உதவிக்கரம் நீட்டினார். இளம் காமெடி நடிகர் கே.பி.ஒய் பாலா வெங்கல் ராவுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். வெங்கல் ராவுடன் பல படங்களில் நடித்த வைகைப் புயல் வடிவேலுவும் உதவி செய்தார்.

இந்நிலையில், வெங்கல் ராவ் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில், தனது மருத்துவச் செலவுக்காக பணம் கொடுத்து உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு, பாலா உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டு எல்லாருக்கும் வணக்கமும் நன்றியும் தெரிவித்துள்ளார். தன்னால் சரியாகப் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் தமிழில் 30 வருடங்களுக்கு மேலாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஒரு வாட்ச்க்கு இத்தனை கோடியா! வாயைப் பிளக்க வைக்கும் ஆனந்த் அம்பானியின் காஸ்ட்லி வாட்ச்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்